IND vs AUS : முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு – சூப்பர் சாய்ஸ்

Debue
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இன்று நாக்பூர் மைதானத்தில் துவங்கியது. இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதனால் இந்த தொடரில் வெற்றி பெற முனைப்பு காட்ட இருக்கிறது.

அதே வேளையில் கடந்த 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வில்லை என்கிற குறையை நீக்க அவர்களும் தங்களது போராட்டத்தை அளிக்க உள்ளனர். இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாக்பூரில் இன்று காலை துவங்கியது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது ஆஸ்திரேலியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், மிடில் ஆர்டரில் ஒருவரும் விளையாட வேண்டிய இடம் காலியாக இருந்தது.

அந்த இரு இடங்களுக்கான தேர்வு யார்? என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அந்த வகையில் டாசில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அந்த இரண்டு மாற்றங்கள் குறித்தும் அறிவித்தார். அதன்படி விக்கெட் கீப்பராக கே.எஸ் பரத் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சூரியகுமார் யாதவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரர்களாக களமிறங்குவதாக அவர் உறுதி செய்தார்.

- Advertisement -

இதன் மூலம் இன்றைய ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர். மேலும் இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சார்களாக அஸ்வின், அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா என மூன்று வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களை தவிர்த்து முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பிடித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சின்னப்புள்ள மாதிரி கம்பிளைண்ட் பண்ணாதீங்க, ஆஸ்திரேலியர்களுக்கு சச்சின் – ரவி சாஸ்திரி கொடுத்த பதிலடி என்ன

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) சூரியகுமார் யாதவ், 6) கே.எஸ்.பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) அக்சர் படேல், 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

Advertisement