50% உங்க தந்தையை போல் சாதிச்சா பெரிய சாதனை தான் – அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஜாம்பவான் அட்வைஸ்

sachinarjun
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பைக்கு வரலாற்றில் மோசமானதாக அமைந்தது. ஏனெனில் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த அணியாக சாதனை படைத்த மும்பை பங்கேற்ற 14 போட்டிகளில் 10 தோல்விகளை பதிவு செய்து முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்துடன் முதல் அணியாக வெளியேறியது. அதனால் ஆரம்பத்திலேயே பிளே ஆப் சுற்று வாய்ப்பை தவற விட்ட அந்த அணி இளம் வீரர்களுக்கு குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

arjun tendulkar

- Advertisement -

ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே அந்த அணியில் நெட் பந்துவீச்சாளராக இருந்து வரும் அவரை இம்முறை 30 லட்சத்துக்கு நேரடியாக மும்பை அணி நிர்வாகம் வாங்கியது. எனவே கடந்த 3 வருடங்களாக பெஞ்சில் அமர்ந்து வரும் அவருக்கு இந்த வருடம் நாக் அவுட் சுற்று வாய்ப்பு பறிபோனதால் கடைசி நேரத்திலாவது வாய்ப்பு கொடுங்கள் என்று முகமது அசாருதீன், ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னாள் வீரர்கள் வெளிப்படையாக கேட்டுக் கொண்டனர்.

சச்சின் மகன்:
இருப்பினும் இதே மும்பை அணிக்கு ஆலோசகராக செயல்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் அவரின் செல்வாக்கை பயன்படுத்தி பரிந்துரையில் இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு பெற்று விட்டார் என்று அனைவரும் விமர்சிப்பார்கள் என்பதை மனதில் வைத்து அந்த அணி நிர்வாகம் கடைசிவரை வாய்ப்பளிக்கவில்லை. அத்துடன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பந்து வீச்சில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதால் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சமீபத்தில் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்திருந்தார்.

இது மட்டுமல்லாமல் கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சினின் மகன் என்பதால் அவர் மீது ஆரம்பம் முதலே அனைவரின் பார்வையும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. மேலும் ஜாம்பவானின் மகன் என்பதால் அவரைப் போலவே இவரும் களமிறங்கிய முதல் போட்டியிலிருந்தே சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அனைவரும் கருதுகின்றனர். அதனால் சாதாரண இளம் வீரர்களைப் போல் அல்லாமல் எப்போதும் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு அழுத்தம் நிறந்த சூழ்நிலையிலேயே இருந்து வருகிறார்.

- Advertisement -

பெயரும் பின்னடைவு:
இந்நிலையில் டெண்டுல்கர் எனும் பெயர் தமது பெயருடன் இருப்பது அர்ஜுனுக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் கபில்தேவ் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் சுதந்திரமாக செயல்பட முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரை பற்றி ஏன் அனைவரும் பேசுகிறார்கள்? ஏனெனில் அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன். அவரை அவராக விளையாட விடுங்கள், சச்சினுடன் ஒப்பிடாதீர்கள். அவரின் பெயரில் டெண்டுல்கர் இருப்பது ஒரு பின்னடைவாகும்.

Kapil-Dev

இதேபோல் டான் பிராட்மேன் மகன் ஒரு கட்டத்தில் தனது பெயரை மாற்றிக்கொண்டார். ஏனெனில் அது அவருக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுத்தது. அவர் தனது பெயரில் பிராட்மேன் என்பதை நீக்கி விட்டார். ஏனெனில் அதன் காரணமாக அனைவரும் அவருடைய தந்தை போல் அவர் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்த்தனர்” என்று கூறினார்.

- Advertisement -

ஜாம்பவானுக்கு மகனாக பிறந்து களத்தில் விளையாடினால் அவரைப் போலவே சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறிய கபில்தேவ் அதன் காரணமாகவே ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் மகன் தனது பெயரின் பின் பகுதியில் ப்ராட்மேனை நீக்கி விட்டதாக தெரிவித்தார். மேலும் சச்சின் டெண்டுல்கர் மகனாக இருந்தாலும் அவரை அவருடன் ஒப்பிடாமல் சுதந்திரமாக விளையாட ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அனைவரிடமும் கபில்தேவ் கேட்டுக்கொண்டார்.

arjun

50% சச்சினை போல்:
அத்துடன் சச்சினின் மகனாக இருப்பதால் அவரை விட இரு மடங்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பார்கள் என்று கூறும் கபில்தேவ் அதையெல்லாம் காதில் வாங்காமல் தனது விளையாட்டில் கவனம் செலுத்தி தனது தந்தையைப் போல் 50% சாதித்தால் கூட அதுவே அர்ஜுன் டெண்டுல்கருக்கு மிகப் பெரிய சாதனை தான் என்று தெரிவிக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அர்ஜுன் மீது அழுத்தத்தை போடாதீர்கள். அவர் இளம் பையன். அவருக்கு தந்தையாக ஜாம்பவான் சச்சின் இருக்கும் போது அவரைப் பற்றி பேசுவதற்கு நாம் யார்? இருப்பினும் மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக செயல்படுங்கள் என்பதை மட்டும் அவருக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் யாருக்காகவும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் இப்படி பண்ணுவாருனு எனக்கு இந்த வருஷம் தான் தெரிஞ்சது – சபா கரீம் புகழாரம்

ஒருவேளை உங்களது தந்தையைப் போல் 50% நீங்கள் வந்தால் அதைவிட பெரியது ஒன்றுமில்லை. டெண்டுல்கர் எனும் பெயரைக் கேட்கும்போதே உங்கள் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு ஏற்படும். ஏனெனில் சச்சின் அவ்வளவு உயர்ந்தவர்” என்று அர்ஜுனுக்கு ஆலோசனை வழங்கினார்.

Advertisement