சஞ்சு சாம்சன் இப்படி பண்ணுவாருனு எனக்கு இந்த வருஷம் தான் தெரிஞ்சது – சபா கரீம் புகழாரம்

Karim
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிளே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெற கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ராஜஸ்தான் அணியானது இம்முறை தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டி வரை சென்று கடைசியில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது.

GTvsRR

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பங்கேற்று விளையாடிய இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சனை முன்னாள் வீரர் சபாக் கரீம் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் சுயநலமற்ற ஒரு ஆட்டத்தை விளையாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஒரு சுயநலமற்ற கிரிக்கெட் வீரர். இந்த தொடர் முழுவதுமே அவர் தனது அணிக்காக ரன்களை குவிக்க வேண்டும் என்று நினைத்து நல்ல ஸ்ட்ரைக் ரேட் உடன் நிறைய ரன்களை அடித்துள்ளார்.

மேலும் சர்வதேச அளவில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் பெஸ்ட் பவுலர்களுக்கு எதிராக தனது அதிரடியை அவர் கையாண்டுள்ளார். பல போட்டிகளில் அவர் விளையாடிய விதம் என்னை கவர்ந்தது. அதோடு அவர் சில முக்கியமான போட்டிகளில் அவர் ரன் குவிக்க தவறுவது உண்மைதான். ஆனால் அவரிடம் இருக்கும் திறமை என்பது அபரிவிதமானது.

Sanju Samson v GT

முக்கிய போட்டிகளில் அவரிடம் இருந்து ரன்கள் வரவில்லை என்றாலும் அவரது பேட்டிங் மற்றும் டைமிங் என இரண்டுமே மிக அற்புதமாக உள்ளது. அவர் தனது ஷாட்களின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனால் எப்போது வேண்டுமானாலும் அவரால் அதிரடியாக விளையாட முடிகிறது. இருப்பினும் அவர் செய்யும் சில தவறுகளால் அவரது ஆட்டம் பெரிய அளவில் பேசப்படாமல் போகிறது.

- Advertisement -

இந்த ஆண்டு அவர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு காரணம் அவரது கேப்டன்சி தான் என்று நினைக்கிறேன். கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடி வருவதால் அவரால் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடிவதாகவும் நினைக்கிறேன் என்று சபா கரீம் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த தொடரில் அவர் ஒரு சில முறை அஷ்வினை முன்கூட்டியே இறக்கி விட்டது சரியான முடிவு அல்ல என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் கலக்கிய டேவால் ப்ரேவிஸ்க்கு தேசிய அணியில் இடம் கிடைக்காதது ஏன் – பவுமா விளக்கம்

ஏனெனில் என்னைப் பொறுத்தவரை ஜாஸ் பட்லருக்கு பிறகு நம்பர் 3-வது இடத்தில் சஞ்சு சாம்சன் களம் இறங்கினால் தான் அது ராஜஸ்தான் அணிக்கு பலம் என்று சபா கரீம் கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய அவர் 28.62 ரன்கள் சராசரியுடன் 458 ரன்களை குறித்துள்ளார். அதோடு இந்த தொடர் முழுவதுமே அவர் 150க்கு நெருங்கிய ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement