ஐ.பி.எல் தொடரில் கலக்கிய டேவால் ப்ரேவிஸ்க்கு தேசிய அணியில் இடம் கிடைக்காதது ஏன் – பவுமா விளக்கம்

Brevis
- Advertisement -

நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பையில் பல திறமையான இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். எப்போதுமே 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பையில் திறம்பட செயல்பட்டு தங்களது எதிர்காலத்தை பிரகாச படுத்திக்கொள்ளும் வீரர்கள் வெகு விரைவாக தேசிய அணிக்காக விளையாட வாய்ப்பினை பெற்று பெரிய கிரிக்கெட் வீரர்களாக மாறியதையும் நாம் கண்டுள்ளோம். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோர் உலககோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி சார்பாக விளையாடிய டேவால் ப்ரேவிஸ் அந்த தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Brevis

- Advertisement -

அதோடு அவரது அதிரடி மற்றும் ஷாட் செலக்சன் ஆகியவற்றை கண்ட ரசிகர்கள் அவரை பேபி ஏ.பி என்றும் செல்லப் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அனைத்து விதமான ஷாட்களையும் விளையாடுவதில் அவர் கை தேர்ந்தவராக உள்ளார். இதன் காரணமாக நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் அவர் மும்பை அணியால் வாங்கப்பட்டு இருந்தார். 19 வயது வீரரான இவர் தேசிய கிரிக்கெட்டில் பங்கேற்கவில்லை என்றாலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்த மும்பை அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பினையும் வழங்கியது.

அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திய அவர் 7 போட்டிகளில் விளையாடி 23 ரன்கள் சராசரியுடன் 142 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 161 ரன்களை குவித்து அசத்தினார். அதிலும் சர்வதேச வீரர்களுக்கு எதிராக ஒரு 19 வயது வீரர் இப்படி அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அவர் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் அவர் மிகப் பெரிய வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கலக்கிய அவருக்கு நிச்சயம் தென் ஆப்பிரிக்க தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Dewald Brevis

ஆனால் இந்திய அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் ரசிகர்கள் அனைவரும் இப்படி மிகச் சிறப்பாக விளையாடும் ஒரு வீரருக்கு தேசிய அணியில் வாய்ப்பை வழங்கி இருக்கலாம். அவருக்கு ஏன் வாய்ப்பை மறுத்து உள்ளீர்கள் என்பது போன்ற கேள்வியை அவருக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் எழுப்பி வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விமர்சனங்களை கண்ட தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் கூறியதாவது : ப்ரேவிஸ் ஒரு அற்புதமான பிளேயர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அவர் ஒரு திறமையான வீரராக இருந்தாலும் தற்போது மிகவும் இளம் வயதில் இருப்பதனால் அவருக்கு அனுபவம் தேவை. அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் இதுவரை அவர் விளையாடாத நிலையில் அவரை சர்வதேச போட்டிகளுக்கு கொண்டு வருவது அவருக்கு அழுத்தத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க : INDvsRSA : எங்க டீம்ல இவரு செம பார்ம்ல இருக்காரு. மோதிப்பாக்க நாங்க ரெடி – தெ.ஆ கேப்டன் சவால்

எனவே இன்னும் சில போட்டிகள் அவர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு அதில் கிடைக்கும் அனுபவத்தோடு அவர் சர்வதேச கிரிக்கெட்டில் காலெடுத்து வைத்தால் எந்த வித அழுத்தமும் இன்றி விளையாடுவார். எனவே முதல் தரப் போட்டிகளில் அவர் சிறிது கவனம் செலுத்தி தனது அனுபவத்தை அங்கிருந்து கற்றுக் கொண்டால் நிச்சயம் வெகுவிரைவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு விளையாடுவார் என பவுமா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement