- Advertisement -
இந்திய கிரிக்கெட்

9 வருடங்கள்.. இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கனவில் விளையாடும் மழை.. கடினமான வாய்ப்பு

கான்பூரில் இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கியது. மழையால் மிகவும் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர்கள் ஜாஹிர் ஹசன் 0, சாத்மன் இஸ்லாம் 24 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார்கள்.

அதன் பின் நிதானமாக விளையாடிய கேப்டன் நஜ்முல் சாண்டோ 40 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டானார். அப்போது மழை வந்ததால் முடிந்த முதல் நாள் முடிவில் 107-3 ரன்கள் எடுத்துள்ள வங்கதேசத்திற்கு களத்தில் ரஹீம் 6*, ஹைக் 40* ரன்களுடன் இருந்தனர். அந்த நிலையில் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்தது.

- Advertisement -

9 வருடம் கழித்து:

அதனால் 2வது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்படுவதாக மதியம் 3.30 மணிக்கு நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 9 வருடங்கள் கழித்து இந்தியாவில் முதல் முறையாக மழையால் ஒரு டெஸ்ட் போட்டியின் நாள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா – தென்னாபிரிக்க அணிகள் மோதிய போட்டியின் 2, 5வது நாட்கள் மழையால் முழுவதுமாக இப்படி ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் நாளையும் கான்பூரில் 60% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இப்போட்டி டிராவில் முடிவடைவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. ஒருவேளை இப்போட்டி மழையால் டிராவில் முடிவடைந்தால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுவது கடினமாகும்.

- Advertisement -

விளையாடும் மழை:

தற்போது 71.67% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியா அடுத்ததாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த 8 போட்டிகளில் குறைந்தது 5 வெற்றிகளை பெற்றால் மட்டுமே இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற முடியும். அதில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளது. அதன் பின் சாவலான ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகளில் 2 போட்டிகளை இந்தியா வெல்ல வேண்டும்.

இதையும் படிங்க: 150 சிக்ஸ்.. கிறிஸ் கெய்ல், ரிஸ்வானின் சாதனைகளை நொறுக்கிய நிக்கோலஸ் பூரான்.. புதிய இரட்டை உலக சாதனை

மேற்குறிப்பிட்ட 5 வெற்றிகளையும் பெறும் திறமை இந்தியாவிடம் இருக்கிறது. இருப்பினும் அதை பெற்றாக வேண்டும் என்ற எக்ஸ்ட்ரா அழுத்தத்திற்கு தற்போது இந்தியா தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக தொடரை வெல்வதோ அல்லது 2 போட்டிகளில் வெல்வதோ மிகவும் கடினமாகும். அதே போல சொந்த மண்ணில் வலுவான நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டி டிராவில் முடிந்தால் கூட இந்தியா ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் கடினமாகும்.

- Advertisement -