அந்த நியூஸிலாந்து பேட்ஸ்மேன் பெரிய சவாலா இருப்பாரு.. குல்தீப் உள்ளிட்ட இந்திய பவுலர்களை எச்சரித்த கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நவம்பர் 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெறும் அப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 4வது இடத்தைப் பிடித்த வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

மறுபுறம் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் உட்பட ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் இந்தியாவை தோற்கடித்த உத்வேகத்துடன் இப்போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து போராட உள்ளது. பொதுவாகவே ட்ரெண்ட் போல்ட் போன்ற நியூசிலாந்து வீரர்கள் ஐசிசி தொடர்களில் மற்ற அணிகளுக்கு எதிராக தடுமாறினாலும் இந்தியாவுக்கு எதிராக அபாரமாக செயல்படுவது வழக்கமாகும்.

- Advertisement -

கவாஸ்கர் எச்சரிக்கை:
அந்த வகையில் இம்முறை 23 வயதிலேயே சச்சினின் சாதனைகளை உடைத்து 565* ரன்களை குவித்து விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு நிகராக அசத்தி வரும் ரச்சின் ரவீந்தரா இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் நியூசிலாந்து பேட்ஸ்மேனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கிளாஸ் தரம் அனுபவம் நிறைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தான் இப்போட்டியில் குல்தீப் யாதவ் உள்ளிட்ட தரமான இந்திய பவுலிங் அட்டாக்கிற்கு சவாலை கொடுப்பார் என்று சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வில்லியம்சன் மகத்தான வீரர். அதனால் காயத்திலிருந்து குணமடைந்து வந்தாலும் அவர் பெரிய ரன்களை அடிக்கும் தன்மை கொண்டவர். தேவைப்பட்டால் இறங்கி வந்தும் வெள்ளைக்கோட்டுக்கு உள்ளேயும் நின்று அவரால் வித்தியாசமாக பேட்டிங் செய்ய முடியும். எனவே அவர் குல்தீப் யாதவ் போன்றவரை எதிர்கொள்ள தடுமாறுவார் என்று நான் நினைக்கவில்லை”

- Advertisement -

“ஒருவேளை அவருக்கு எதிராக வில்லியம்சன் பவுண்டரி அடிக்க தடுமாறினால் கூட 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து விடுவார். எனவே ஒரு ஓவரில் 6 ரன்கள் எடுப்பது என்பது எந்த வகையான கிரிக்கெட்டிலும் நல்ல ரன் ரேட்டாகும். அதே சமயம் பவுண்டரி அடிக்கும் பந்து வந்தால் கண்டிப்பாக வில்லியம்சன் ரிஸ்க் எடுத்து அடிப்பார். 2019இல் அவர் சற்று அதிரடியாக விளையாடவில்லை என்றாலும் இப்போது வேகமாக ரன்கள் குவிப்பதை பார்க்க முடிகிறது”

இதையும் படிங்க: சச்சின், தோனியின் தனித்துவ சாதனையை உடைக்கும் கிங் கோலி.. நாக் அவுட் அவமானத்தை துடைப்பாரா?

“குறிப்பாக கடந்த போட்டியில் 95 ரன்களில் அவுட்டான அவர் தம்முடைய சதத்தை தவற விட்டார். அதை பெரிய ஷாட் அடிக்கப் போய் அவர் தவற விட்டார். எனவே அதே போன்ற ஆட்டத்தை அவர் குல்தீப்புக்கு எதிராக வெளிப்படுத்த முயற்சிப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலிக்கு நிகராக வில்லியம்சன் சவாலை கொடுக்கும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement