சச்சின், தோனியின் தனித்துவ சாதனையை உடைக்கும் கிங் கோலி.. நாக் அவுட் அவமானத்தை துடைப்பாரா?

Virat Sachin MS Dhoni
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயம் செய்வதற்காக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனல் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றில் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 4வது இடம் பிடித்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் உட்பட ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் இந்தியாவை தோற்கடித்து வரும் நியூசிலாந்து இப்போட்டியிலும் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றி காண்பதற்கு போராட உள்ளது. மறுபுறம் தற்சமயத்தில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் சொந்த மண்ணில் லீக் சுற்றில் நியூசிலாந்தை தோற்கடித்ததை போலவே இப்போட்டியிலும் வென்று முதல் அணியாக ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

அவமானத்தை துடைப்பாரா:
அந்த வகையில் இப்போட்டியில் களமிறங்கும் விராட் கோலி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக (4) செமி ஃபைனல் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைக்க உள்ளார். அதாவது 2011 உலகக் கோப்பை செமி ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அவர் 2015 உலகக் கோப்பை செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

அதைத்தொடர்ந்து 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் கேப்டனாக இதே நியூசிலாந்துக்கு எதிராக தற்போது மீண்டும் அதே அணிக்கு எதிராக 2023 உலகக் கோப்பை செமி ஃபைனலில் விளையாட உள்ளார். இதற்கு முன் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் (1996, 2003, 2011) மற்றும் எம்எஸ் தோனி (2011, 2015, 2019) ஆகியோர் தலா 3 உலகக்கோப்பை செமி ஃபைனல்களில் விளையாடியிருந்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

இருப்பினும் இந்த செமி ஃபைனல்களில் எப்போதுமே விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டதில்லை என்றே சொல்லலாம். அதாவது 2011 உலகக்கோப்பை காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24, அரை இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 9, ஃபைனலில் இலங்கைக்கு எதிராக 35 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் 2015 உலகக்கோப்பை காலிறுதியில் வங்கதேசத்துக்கு எதிராக 3, அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 ரன் மட்டுமே எடுத்தார்.

இதையும் படிங்க: நியூஸிலாந்து அதை செய்ய வருவாங்கன்னு தெரியும்.. ஆனா அதெல்லாம் வேலையாகாது.. ரோஹித் பேட்டி

அதே போல 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக 1 ரன் மட்டுமே எடுத்த அவர் இதுவரை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைகளில் விளையாடிய 6 நாக் அவுட் போட்டிகளிலும் ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. எனவே கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் இந்த அவமானத்தை இம்முறை துடைத்து இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

Advertisement