எல்லாரும் நினைக்கிற மாதிரி ஈஸி கிடையாது.. இந்தியாவுடன் செமி ஃபைனலில் மோதுவது பற்றி வில்லியம்சன் பேட்டி

Kane Williamson 2
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நாக் அவுட் சுற்றில் விளையாடும் அணிகள் உறுதியாகியுள்ளன. அதில் தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று கொல்கத்தாவில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மோதுவதற்கு தகுதி பெற்றுள்ளன. அதே போல புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்தியாவுடன் மோதுவதற்கு நியூசிலாந்து 99% தகுதி பெற்றுள்ளது.

குறிப்பாக நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை தோற்கடித்த அந்த அணி 10 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட்டை கொண்டிருப்பதால் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் இந்தியாவுடன் மோதுவது உறுதியாகியுள்ளது. அதன் காரணமாக இங்கிலாந்து எதிரான கடைசி போட்டியில் 287 ரன்கள் அல்லது 284 பந்துகள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே செமி ஃபைனல் வெல்ல முடியும் என்ற அசாத்தியமாற்ற சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

ஈஸி கிடையாது:
அதனால் பாகிஸ்தான் வெளியேறுவதை நினைத்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் நியூசிலாந்தை எதிர்கொள்வதை நினைத்து கவலையடைந்துள்ளனர். ஏனெனில் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட ஐசிசி தொடர்களில் பெரும்பாலும் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்விகளையே அதிகமாக சந்தித்துள்ளது.

சொல்லப்போனால் நாக் அவுட் சுற்றில் இதுவரை நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முறை கூட இந்தியா வென்றதில்லை. இருப்பினும் தற்போது 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று சொந்த மண்ணில் கில்லியாக செயல்பட்டு வரும் இந்தியா கடந்த சில வாரங்களுக்கு முன் தரம்சாலாவில் நடைபெற்ற லீக் சுற்றில் 20 வருடங்கள் கழித்து நியூசிலாந்தை ஐசிசி தொடரில் முதல் முறையாக தோற்கடித்தது போல் இப்போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் பெரும்பாலானவர்கள் நினைப்பது போல் செமி ஃபைனலில் இந்தியாவை தங்களால் எளிதாக வீழ்த்தி விட முடியாது என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி இலங்கையை வீழ்த்திய பின் அவர் பேசியது பின்வருமாறு. “செமி ஃபைனலில் விளையாடுவது ஸ்பெஷலாகும். ஆனால் அப்போட்டியில் சொந்த மண்ணில் விளையாடும் அணிக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய சவாலாகும்”

இதையும் படிங்க: இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது.. இது தரம்சாலா கிடையாது.. செமி ஃபைனல் பற்றி இந்தியாவை எச்சரித்த ட்ரெண்ட் போல்ட்

“தற்போதைக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். குறிப்பாக சில நாட்கள் ஓய்வெடுத்து அப்போட்டியில் நாங்கள் புத்துணர்ச்சியுடன் விளையாட உள்ளோம்” என்று கூறினார். அந்த வகையில் இதுவரை வெற்றி நடை போட்டு வரும் இந்தியாவுக்கு இப்போட்டி மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்தியா தங்களுடைய கடைசி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement