IND vs NZ : இரண்டாவது போட்டி இப்படி ஆகும்னு நெனைக்கல – வருத்தம் தெரிவித்த கேன் வில்லியம்சன்

Kane-Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் வேளையில் இன்று ஹாமில்டன் நகரில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

Shikhar-Dhawan-and-Gill

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்த நிலையில் இந்திய அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 89 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி தடைப்பட்டு பின்னர் நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காத காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த போட்டியானது இரு அணிகளுக்குமே வெற்றி தோல்வி இன்றி முடிவு கிடைக்காமல் போனது.

அதனை தொடர்ந்து அடுத்ததாக நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது. அதே வேளையில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றும். இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது குறித்து பேசியுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில் : இந்த போட்டி மழையினால் நின்றது மிகவும் ஏமாற்றத்தை தந்துள்ளது. வானிலை இங்கு இன்று எங்களுக்கு சாதகமாக இல்லை. எங்கு சென்றாலும் மழை துரத்தி வருகிறது.

Seden-Park-Rain

ஆனாலும் ஒரு அணியாக நாங்கள் இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்டு வருகிறோம். இந்த தொடரில் டாம் லேதம் அருமையான ஆட்டத்தை முதல் போட்டியில் வெளிப்படுத்தினார். இனிவரும் போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன். அதே வேளையில் அடுத்த போட்டியிலும் மழை பெய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற இயற்கை சூழலை நாம் கட்டுப்படுத்த இயலாது.

- Advertisement -

எது எப்படி இருப்பினும் எப்பொழுது விளையாடினாலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். அதேபோன்று எங்கள் அணியில் உள்ள டிம் சவுதி அனைத்து ஃபார்மெட்டிலும் சிறந்த வீரராக இருக்கிறார். அவர் அணியில் இருப்பது எங்களுடைய தரத்தை மேலும் அதிகரிக்கிறது. ஒரு வீரர் 150 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. அந்த வகையில் சவுதி எங்கள் அணிக்காக இன்று 150ஆவது போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : நல்லார்க்கிங்களா வேலைலாம் எப்படி போகுது – ரிவர்ஸ் ஷாட் போட்டு மைதான பராமரிப்பாளருடன் ரெய்ட் போன சூரியகுமார்

அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நியூசிலாந்து அணிக்காக மிகவும் தரமான பங்களிப்பினை அவர் நீண்ட காலமாக வழங்கி வருகிறார். இனியும் அவருடைய பங்களிப்பு எங்கள் அணிக்கு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அடுத்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் கேன் வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement