யாரும் கண்டுக்கிறதே இல்ல – விராட் கோலியை விட தரைமட்ட பார்மில் நட்சத்திர வெளிநாட்டு வீரர்

WTC
- Advertisement -

கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் தொடர்ச்சியாக தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வெற்றிகளை தங்களது நாட்டுக்காக குவிக்கும் போது தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து நட்சத்திரங்களாக உருவெடுக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் சச்சினுக்கு பின் ஒரு ரன் மெஷினாக உலகின் அனைத்து இடங்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்து அதிரடியான சதங்களை விளாசி பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இதுவரை 70 சதங்கள் அடித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின் அதிக சதங்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ளார்.

இருப்பினும் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்த அவர் அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்,ட் ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிக்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இத்தனைக்கும் இடையிடையே அரை சதங்கள் அடித்தாலும் 2019க்கு முன்பு வரை அபாரமாக செயல்பட்டு “விராட் கோலி என்றால் களமிறங்கினால் நிச்சயம் சதமடிப்பார்” என்று அவர் தமக்கு தாமே உருவாக்கிய பிம்பமே தற்போது பார்மை இழந்து தவிக்கிறார் என்று அவரை பற்றி அனைவரிடமும் நினைக்க வைக்கிறது.

- Advertisement -

தினமும் பேச்சு:
அதிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் அற்புதமாக செயல்பட்டு சதங்கள் அடித்துள்ள அவர் எப்போது சதம் அடிப்பார், எப்போதும் முழுமையான பார்முக்கு திரும்புவார் என்று தினம்தோறும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். அதேபோல் நிறைய முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் வல்லுநர்களும் விராட் கோலியை பற்றியும் அவர் எப்போது சதம் அடிப்பார் என்பது பற்றியும் தினம்தோறும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். அதாவது அவர் அடிக்கும் அரை சதங்களை யாருமே கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது.

இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் தங்களது திறமையால் உலகின் அனைத்து சவாலான நாடுகளிலும் கால சூழ்நிலைகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து தங்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என நிரூபித்த இந்தியாவின் விராத் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரை “ஃபேப் 4” என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடுகின்றனர். இருப்பினும் இதில் விராட் கோலி மட்டுமே சமீப காலங்களில் பார்மின்றி தவிப்பதாக அனைவரும் பேசுகின்றனர். ஆனால் அவரை விட மோசமாக நியூஸிலாந்தின் கேப்டனாக இருக்கும் கேன் வில்லியம்சன் சுமாராக பேட்டிங் செய்வது பற்றி யாரும் பேசுவது கிடையாது.

- Advertisement -

சுமார் வில்லியம்சன்:
1. ஆம் தோனியை விட அனைத்து நேரங்களிலும் கூலாக காட்சியளிக்கும் கேன் வில்லியம்சன் 2019-ஆம் ஆண்டிலிருந்து களமிறங்கிய 8 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 15 இன்னிங்சில் வெறும் 255 ரன்களை 18.21 என்ற படுமோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார்.

2. இந்த காலகட்டங்களில் வெறும் 1 அரை சதம் மட்டுமே எடுத்துள்ள அவரின் அதிகபட்ச ஸ்கோராக 52* ரன்கள் எடுத்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக அந்த 52* ரன்கள் கடந்த 2021இல் இந்தியாவுக்கு எதிராக சவுதம்டன் நகரில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வந்தது என்பது இந்திய ரசிகர்களுக்கு வேதனையான அம்சமாகும்.

- Advertisement -

3. தற்போது இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கூட 2 இன்னிங்ஸ்களிலும் அவர் 2, 15 என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

4. ஆனால் இதே காலகட்டத்தில் அதாவது 2019-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் விராட் கோலி வெளிநாடுகளில் களமிறங்கிய 16 இன்னிங்சில் 715 ரன்களை 37 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

5. இந்த காலகட்டங்களில் அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் 6 அரை சதங்களை அடித்து அசத்தியுள்ளார். அதிகபட்ச ஸ்கோராக கடந்த பிப்ரவரி மாதம் கேப் டவுன் நகரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 79 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : எல்லாம் ஐபிஎல் செயல் – 2022 சீசனில் ஒரு மேட்ச் கூட விளையாடாமல் 1 கோடி சம்பாதித்தத 3 வீரர்கள்

இதிலிருந்தே விராட் கோலியை விட கேன் வில்லியம்சன் கடந்த 3 வருடங்களாக சொந்த மண் தவிர வெளிநாடுகளில் தரை மட்ட அளவில் செயல்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. ஆனாலும் அவரைப் பற்றி எந்த ஊடகமும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கண்டுகொள்ளாமல் விமர்சிக்காமல் எதுவும் பேசாமல் இருப்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

Advertisement