- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த ஒன்னு போதாதா? தகுதியான சுப்மன் கில்லை நாம் சிறந்த இந்திய கேப்டனாக பார்ப்போம்.. வில்லியம்சன் பேட்டி

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி சுப்மன் கில் தலைமையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக இத்தொடரின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட போது நிறைய விமர்சனங்களை சந்தித்தார்.

ஏனெனில் இதற்கு முந்தைய வெளிநாட்டு தொடர்களில் அவர் பெரிதாக ரன்கல் குவித்ததில்லை. அதனால் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்று அவரை சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த கில் 2வது போட்டியில் 430 ரன்களை விளாசி உலக சாதனை புரிந்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தகுதியான கில்:

அதனால் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சுப்மன் கில் தம்மை இந்தியாவின் கேப்டனாக நியமித்ததை சரியென்று நிரூபித்தார். இந்நிலையில் சுப்மன் கில் நீண்ட காலம் இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைமை தாங்க தகுதியான கேப்டன் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் வெளிநாட்டில் தடுமாறிய அவர் கேப்டனாக பொறுப்பேற்றதும் 3 போட்டிகளில் 600+ ரன்கள் அடித்ததே அதற்கு சான்று என்றும் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.

இங்கிருந்து கில் பாடங்களைக் கற்றுக்கொண்டு இன்னும் சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்றும் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இது பற்றி வில்லியம்சன் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் வேலையில் அவர் அழகாக பதிலளித்தார் அல்லவா? கேப்டன்ஷிப் அவருடன் நன்றாக உட்காரும் என்று நான் எப்போதும் கருதினேன். ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருப்பது கொஞ்சம் வித்தியாசமானது என்பதை நான் அறிவேன்.

- Advertisement -

வில்லியம்சன் பாராட்டு:

“அது உங்கள் நாட்டிற்கு கேப்டனாக செயல்படுவதற்கான ஒரு குறுகிய திட்டமாக இருக்கும். சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதைப் பார்க்கும் போது வயதை தாண்டிய புத்திசாலித்தனம் இருப்பதாக தெரிகிறது. கேப்டன்ஷிப் இயற்கையாகவே அவர் ஏற்று நடத்தக்கூடிய பொறுப்பாக தெரிகிறது. எனவே அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை”

இதையும் படிங்க: பிரசித் கிருஷ்ணா வேண்டாம்.. பும்ரா ஓய்வெடுத்தால் இந்தியா அவரை விளையாட வைக்கலாம்.. ரஹானே பேட்டி

“இங்கிலாந்துக்கு வந்து சவாலான டுக் பந்துகளை எதிர்கொண்ட அவர் டாமினேட் செய்யும் வகையில் பேட்டிங் செய்ததைப் பார்ப்பது அற்புதமாக இருந்தது. அதே சமயம் இந்தத் தொடரில் கேப்டனாக கற்றுக்கொள்ள அவருக்கு நிறைய மதிப்புள்ள பாடங்கள் கிடைக்கும். சுப்மன் கில்லிடம் நாம் ஒரு நல்ல கேப்டனை பார்க்கப் போகிறோம். இன்னும் அவர் ஆரம்பக் காலத்திலேயே இருக்கிறார்” என்று கூறினார்.

- Advertisement -