இந்திய அணியில் ஷமி பெஞ்சில் இருக்காரு.. நீங்க இப்டியே இருந்தா அக்டோபர் 14இல் செஞ்சு விட்ருவாங்க – பாக் அணியை எச்சரித்த அக்மல்

kamran Akmal 3
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. மறுபுறம் அத்தொடரில் வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுடன் தோற்று வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்டிருப்பதால் அந்த அணி இந்தியாவை எளிதாக தோற்கடிக்கும் என்று அந்நாட்டை சேர்ந்தவர்கள் ஆரம்பம் முதலே பேசி வந்தனர். ஆனால் சூப்பர் 4 சுற்றில் ஷாஹீன் அப்ரிடி போன்ற பவுலர்களை அடித்து நொறுக்கிய இந்தியா பந்து வீச்சு துறையிலும் மிரட்டலாக செயல்பட்டு 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத தோல்வியை பாகிஸ்தானுக்கு பரிசளித்தது.

- Advertisement -

செஞ்சு விட்ருவாங்க:
அதனால் மோசமான ரன்ரேட் பெற்று மனதளவிலும் உடைந்த அந்த அணியினர் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறினார்கள். மேலும் அந்த தோல்வியால் பாபர் அசாம, சாகின் அப்ரிடி போன்ற வீரர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி, கில் ஆகியோர் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கும் முகமது ஷமி பெஞ்சில் அமர்ந்திருக்கும் அளவிற்கு இந்திய அணி வலுவாக இருப்பதாக கம்ரான் அக்மல் பாராட்டியுள்ளார். மறுபுறம் பாகிஸ்தான் வீரர்கள் அதை சமாளிக்கும் அளவுக்கு தற்சமயத்தில் தயாராக இல்லை என்று தெரிவிக்கும் அவர் இதே போல செயல்பட்டால் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் 2023 உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியாவிடம் படு தோல்வியை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நல்ல ஃபார்மில் இருக்கும் முகமது ஷமி பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். அவர் விளையாடும் 11 பேர் அணியில் கூட இடம் பெறவில்லை. இது இந்திய அணி முழுமையான பவுலிங் கூட்டணியை கொண்டிருப்பதை காட்டுகிறது. அதே போல விராட் கோலி, ரோஹித் சர்மா, கில் ஆகியோர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். அதனால் இந்தியாவின் பேட்டிங் துறையும் முழுமையாக இருக்கிறது”

இதையும் படிங்க: உழைப்பின் நாயகனாக ஜொலிக்கும் சிராஜ்.. ஆசிய கோப்பையில் ஆடிய ருத்ரதாண்டவத்தால் – ஐசிசி தரவரிசையில் புதிய சாதனை

“எனவே பாகிஸ்தான் அணியினர் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டுமெனில் அதற்கு சரியான திட்டங்களுடன் தயாராக வேண்டும். ஆனால் கடந்த 3 வருடங்களைப் போல 2023 ஆசிய கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் அந்த போட்டியிலும் அதே அணுகுமுறையை பின்பற்றினால் படுமோசமான தோல்வியை சந்திக்க நேரிடலாம். எனவே அவர்கள் சிறப்பாக தயாராக வேண்டும்” என்று கூறினார்.

Advertisement