இந்தியா பாடம் கற்பிச்சிட்டாங்க.. இப்டி ஸ்கூல் பசங்க மாதிரி இருந்தா நெதர்லாந்தை கூட வீழ்த்த முடியாது – பாக் அணி பற்றி கம்ரான் அக்மல்

Kamran Akmal 6
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முதலாவதாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக அந்த போட்டிக்கு முன்பாக பரம எதிரி பாகிஸ்தானை சூப்பர் 4 சுற்றில் மீண்டும் எதிர்கொண்ட இந்தியா வெற்றி பெறுவதற்கு தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இதே தொடரின் லீக் சுற்றில் ஷாஹீன் அப்ரிடி போன்ற பவுலர்களுக்கு எதிராக விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறியதால் 66/4 என திண்டாடிய இந்தியா கிசான் கிசான் – பாண்டியாவின் போராட்டத்தால் ஓரளவு மீண்டெழுந்தது.

இருப்பினும் அதே போல பவுலர்களை சூப்பர் 4 போட்டியில் மிகச் சிறப்பாக எதிர்கொண்ட ரோகித் சர்மா 53, கில் 58, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* என டாப் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை அடித்து இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினர். சொல்லப்போனால் அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா புதிய சாதனையும் படைத்தது.

- Advertisement -

கம்ரான் அக்மல் விமர்சனம்:
மறுபுறம் பந்து வீச்சில் சொதப்பிய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கத் தவறியதால் படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக படுமோசமான ரன் ரேட்டை பெற்ற அந்த அணி தம்முடைய கடைசி போட்டியில் இலங்கையை மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா நல்ல பாடம் கற்பித்ததாக முன்னாள் வீரர் கம்ரான் அகமது விமர்சித்துள்ளார். குறிப்பாக 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி ஓரளவு ரன் ரேட்டை காப்பாற்ற முடியாத அளவுக்கு பாகிஸ்தானின் பேட்டிங் மோசமாக இருந்ததாக விமர்சிக்கும் அவர் இப்படி இருந்தால் 2023 உலகக்கோப்பை வெல்வது கனமாகவே இருக்கும் என்பதுடன் நெதர்லாந்தை கூட வீழ்த்த முடியாது என்று அதிரடியாக பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஆசிய கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்று உலகக் கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்பும் நீங்கள் இந்த அணுகுமுறையை கொண்டிருந்தால் நெதர்லாந்தை கூட வீழ்த்த முடியாது. இந்த சமயத்தில் அணி நிர்வாகம் என்ன செய்கிறது? யார் டாஸ் வென்று முதலில் பந்து வீச சொன்னது? வெற்றி பெற விட்டாலும் குறைந்தபட்சம் கடைசி வரை களத்தில் இருக்குமாறு வீரர்களிடம் சொல்லுங்கள்”

இதையும் படிங்க: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா ஃபிக்சிங் பண்ணாங்களா? சோயப் அக்தர் பதிலடி பேட்டி

“ஏனெனில் உங்களுடைய மோசமான பேட்டிங்கால் ரன் ரேட் மோசமாக பாதித்துள்ளது. மேலும் வங்கதேசத்துக்கு எதிராக நீங்கள் வெறும் 190 ரன்களையே 40 ஓவர்களில் சேசிங் செய்தீர்கள். குறிப்பாக சடாப் கான், இப்திகார் அகமது, சல்மான் ஆகா ஆகியோர் அவுட்டான விதம் மோசமாக இருந்தது. அவர்களை குறைந்தபட்சம் 50 ஓவர்கள் விளையாடி 260 – 280 ரன்களையாவது எடுக்க சொல்லுங்கள். தற்போது அவர்கள் பாகிஸ்தான் வாரியம் கேள்வி கேட்காது என்ற நினைப்பில் எந்த திட்டமும் இல்லாமல் விளையாடுகின்றனர். என்னை கேட்டால் இந்தியா போன்ற அணிக்கு எதிராக நீங்கள் ஸ்கூல் பையன்களை போல மோசமாக செயல்பட்டீர்கள்” என்று கூறினார்.

Advertisement