- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு ஐபிஎல் வாய்ப்பு தேவையில்லை.. இந்தியாவிடம் எதிர்பார்ப்பது இது தான்.. கம்ரான் அக்மல்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக விளையாடின. இருப்பினும் 2008 மும்பை தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அதே போல ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. அத்துடன் பாகிஸ்தானில் நடைபெற்ற 2023 ஆசியக் கோப்பையில் விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.

இந்த சூழ்நிலையில் அடுத்ததாக வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. அந்தத் தொடரிலும் பாதுகாப்பு பிரச்சினைகளால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசியலை ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் வேண்டாம்:

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இந்தியா வழங்க வேண்டியதில்லை என்று முன்னாள் வீரர் கம்ரான் அகமது தெரிவித்துள்ளார். இருப்பினும் இருதரப்பு தொடர்கள் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் தங்களுடன் இந்தியா விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“பிசிசிஐக்கு சொந்தமாக விதிமுறைகள் உள்ளது. ஒருவேளை இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே இருதரப்பு தொடர்கள் துவங்கினால் ஐபிஎல் தொடரில் எங்களது வீரர்கள் விளையாடாத பிரச்சனையும் முடிவுக்கு வரும். ஒருவேளை நீங்கள் ஐபிஎல் தொடரில் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை எனில் பரவாயில்லை. எங்களுக்கு அது தேவையில்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை”

- Advertisement -

பிஎஸ்எல் இருக்கு:

“எங்களிடம் சொந்தமாக பிஎஸ்எல் இருக்கிறது. அது ஐபிஎல் தொடருக்கு நிகராக முடியாது என்பது எனக்கு தெரியும். ஆனால் நாம் முதலில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவோம். ஏனெனில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் இருநாட்டு ரசிகர்களையும் ஒன்றிணைக்கும். அதனாலேயே அது மற்ற போட்டிகளை விட உயர்ந்ததாக கருதப்படுகிறது. நாங்கள் 2004, 2007, 2011 ஆகிய வருடங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம்”

இதையும் படிங்க: இந்தியாவை சாய்க்கலாம்.. அவங்கள சாதாரணமா எடுத்துக்காம பிளான் போடுங்க.. ரோஹித்தை எச்சரித்த ரெய்னா, ஹர்பஜன்

“அந்தத் தொடர்களில் நானும் இருந்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதே போல தற்போது எங்கள் நாட்டுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டும். நாங்களும் தொடர்ந்து இந்தியாவுக்கு சென்று விளையாடுவோம்” என்று கூறினார். இதற்கிடையே இந்தியாவின் ஜெய் ஷா ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதனால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -