விராட் கோலி இப்படி தொடர்ந்து மோசமாக ஆட்டமிழந்து வர இதுவே காரணம் – முகமது கைப் ஓபன்டாக்

Kaif
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து இரண்டு ஆண்டுகள் தாண்டிய நிலையில் தற்போது தனது 71-ஆவது சதத்திற்காக காத்திருக்கிறார். இப்போது அடிப்பார், அப்போது அடிப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் கோலி தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடர் முடிந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலாவது கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Kohli

- Advertisement -

ஆனால் நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளிலும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து விராட் கோலி ஏமாற்றத்தை அளித்துள்ளார். முதல் போட்டியின்போது புல் ஷாட் அடிக்க நினைத்து ஆட்டமிழந்த அவர் தற்போது இரண்டாவது போட்டியில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விராட் கோலி ஆட்டம் இழப்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த போட்டியின் போது கோலி புல் ஷாட் ஆட முயன்று விக்கெட்டை இழந்தார். இந்த இரண்டாவது போட்டியின் போது சரியான நேரத்தில் கால் நகர்த்தாமல் அவுட் ஆகியுள்ளார்.

kohli

ஏற்கனவே இதே போல் ஆண்டர்சன் பந்துவீச்சில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஆட்டமிழந்து இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இப்படி மோசமாக அவுட் ஆனது கிடையாது. இதனை என்னால் நம்ப முடியவில்லை. பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்ற பவுலர்கள் ஒரு சில முறை இதுபோன்று பந்து வீசுவது வழக்கம்தான். இதுவே கோலி சிறப்பான பார்மில் இருந்தால் அந்த பந்தினை மிட் ஆப் திசையில் பவுண்டரிக்கு விரட்டி இருப்பார். ஆனால் தற்போது அவர் நம்பிக்கை இழந்து உள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இதன் காரணமாகவே அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. கோலியின் நம்பிக்கை சற்று குறைந்துள்ளதாலே அவர் தொடர்ந்து இதுபோன்று மோசமாக ஆட்டமிழந்து வருகிறார் என்று கைப் கூறினார். விராட் கோலி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சதம் விளாச உள்ளதால் ஒவ்வொரு அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. என்னதான் மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக கோலி இருந்தாலும் அவரது இந்த தொடர் சொதப்பல் தற்போது அவருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஒரு வருத்தத்தை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : குறைந்த தொகைக்கு தங்களது பெயரை மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ள – 4 தரமான வீரர்கள்

நேற்றைய போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை குவித்தது. தொடர்ந்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 46 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2 க்கு 0 என்ற கணக்கில் அவர்கள் இந்திய அணியிடம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement