குறைந்த தொகைக்கு தங்களது பெயரை மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ள – 4 தரமான வீரர்கள்

pla
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். கடந்த 2018க்கு பின் முதல் முறையாக இந்த ஆண்டு மெகா அளவில் நடைபெற உள்ள இந்த ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

Ipl cup

- Advertisement -

இந்த ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலை தொகையாக 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, 50 லட்சம், 20 லட்சம் என 5 வகையான பிரிவுகளின் கீழ் அனைத்து வீரர்களும் பங்கேற்க உள்ளார்கள். அதில் தரமான வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் பல கோடி ரூபாய்களை செலவழிக்க தயாராக காத்திருக்கின்றன. ஐபிஎல் ஏலம் என்றாலே நட்சத்திர வீரர்கள் பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போவது வாடிக்கையான ஒன்றாகும்.

குறைந்த சம்பளம்:
அதிலும் 15 கோடிகளுக்கும் மேல் ஒப்பந்தம் செய்யப்பட்ட எத்தனையோ வீரர்கள் கோடிகளில் சாதனைகளைப் படைத்துள்ளதை பார்த்தோம். இருப்பினும் அந்த ஐபிஎல் சீசன் முடிந்த பின்னர் அவர்கள் வாங்கிய பல கோடி ரூபாய் சம்பளத்திற்காக சிறப்பாக செயல்பட்டார்களா என வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பார்த்தால் பெரும்பாலான சமயங்களில் அவர்கள் சுமாராகவே செயல்பட்டு உள்ளார்கள்.

Ipl

ஆனால் அதே சமயம் மிக குறைந்த சம்பளத்திற்கு ஒப்பந்தமான எத்தனையோ வீரர்கள் பெரும்பாலான நேரங்களில் யாரும் எதிர்பாராத வண்ணம் மிகச் சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். எனவே ஐபிஎல் ஏலத்தில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு கிடைக்கும் வீரர்களை வாங்குவதே புத்திசாலித்தனமான ஒரு செயலாகும். அந்த வகையில் ஐபிஎல் 2022 ஏலத்தில் குறைந்த சம்பளத்திற்கு கிடைக்கும் தரமான வீரர்கள் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. பப் டு பிளேஸிஸ்: தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் பப் டு பிளிசிஸ் கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பு வீரராக விளையாடி வருகிறார். கடந்த வருடம் வெறும் 1.6 கோடிகளுக்காக சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமான அவர் ஆரம்பம் முதலே பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார் என்றே கூறலாம். கடந்த சீசனில் சென்னை அணிக்காக பைனல் உட்பட 16 போட்டிகளில் விளையாடி 6 அரை சதங்கள் உட்பட 633 ரன்கள் குவித்த அவர் 4வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். அத்துடன் கடந்த வருடம் அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில் 2வது இடத்தையும் பிடித்து அசத்தினார்.

Faf du plessis

மேலும் பவுண்டரி எல்லையில் கேட்ச்களையும் அபாரமாக பீல்டிங் செய்வதிலும் இவர் வல்லவர். இருப்பினும் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்காத காரணத்தால் ஐபிஎல் 2022 ஏலத்தில் இவர் 2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் பங்கேற்க உள்ளார். இவரிடம் உள்ள திறமைக்கு கண்டிப்பாக 2 கோடிகள் என்பது மிகவும் குறைந்த தொகையாகும். ஏற்கனவே 37 வயதை கடந்து விட்டதால் இவரை ஏலத்தில் வாங்க பெரும்பாலான அணிகள் யோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த யோசனையை விட்டுவிட்டு இவரை நம்பி வாங்கினால் கண்டிப்பாக முழு மூச்சுடன் செயல்பட்டு வெற்றி பங்காற்றுவார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

2. ஜேசன் ஹோல்டர் : வெஸ்ட்இண்டீஸ் நட்சத்திரம் ஜேசன் ஹோல்டர் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான வெறும் 8 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். ஆனால் அந்த 8 போட்டிகளில் 85 ரன்களை அடித்த அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டார். இத்தனைக்கும் கடந்த வருடம் அவரின் சம்பளம் வெறும் 75 லட்சமாகும்.

Holder 1

மேலும் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஹாட்ரிக் உட்பட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து மிகச்சிறப்பான பார்மில் உள்ளார். இருப்பினும் வரும் ஐபிஎல் 2022 ஏலத்தில் 1.5 கோடிகள் என்ற மிகக் குறைந்த விலையில் விண்ணப்பம் செய்துள்ள இவரை எவ்வளவு கோடிகள் கொடுத்து வேண்டுமானாலும் வாங்கலாம். ஏனெனில் இவர் 1.5 கோடிக்கும் மேலான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் தகுதியை கொண்டுள்ளார்.

- Advertisement -

3. ஹர்ஷல் படேல் : ஐபிஎல் 2022 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேல் அந்த சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற ட்வயன் ப்ராவோவின் சரித்திர சாதனையை சமன் செய்தார். மேலும் கடந்த சீசனில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகள், ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் போன்ற பல சாதனைகளை படைத்த இவர் வெறும் 20 லட்சத்துக்கு விளையாடினார் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

harshal

அதன் காரணமாக இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ள அவரின் மவுசு தற்போது கூடி உள்ளதால் ஐபிஎல் 2022 ஏலத்தில் 2 கோடி பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளார். 20 லட்சத்தில் இருந்து 2 கோடிகளுக்கு வந்து நிற்பதில் இருந்தே இவர் எந்த அளவுக்கு தரமானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

4. ஷாருக்கான்: தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் வீரர் சாருக்கான் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த சீசனில் இவரை 5 கோடிகள் கொடுத்து வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே கூறலாம்.

sharukh

ஏனெனில் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2021 தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸர் அடித்து தமிழகத்திற்கு சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். அதன் பின் நடந்த விஜய் ஹசாரே கோப்பையிலும் கூட தமிழகத்திற்காக பினிஷராக செயல்பட்ட சாருக்கான் ஒரு தரமான வீரராக உருவெடுத்துள்ளார். இப்படிப்பட்ட இவர் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க வெறும் 20 லட்சத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளது ஆச்சரியமாகும். எனவே குறைந்த விலையில் கிடைக்கும் இவரை எந்தவித யோசனையும் இல்லாமல் வாங்கினால் அதன்பின் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுப்பார் என உறுதியாக நம்பலாம்.

Advertisement