
வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது டாக்கா நகரில் இன்று அக்டோபர் 21-ஆம் தேதி துவங்கியது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி தென்னாப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 40.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களை மட்டுமே குவித்தது.
தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக மகாராஜ், முல்டர் மற்றும் காகிசோ ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டுநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை குவித்துள்ளது.
இதன் மூலம் 34 ரன்கள் முன்னிலையுடன் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீமை ஆட்டமிழக்க வைத்ததன் மூலம் அவர் 65 ஆவது டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : 1994 சோகத்துக்கு வெல்கம் ரோஹித் சர்மா.. விராட் கோலி பெயரில் 2 பரிதாபம் எழுதிக்கிட்டாரு.. மைக்கேல் ஆதர்டன் பேட்டி
அதிலும் குறிப்பாக உலகில் வேறு எந்த வீரமும் செய்ய செய்யாத சாதனையாக குறைந்த பந்துகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக 12602 பந்துகளை வீசி 300 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் இன்று தனது 11,817-வது பந்தில் 300-வது விக்கெட்டை கைப்பற்றி குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அவர் சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.