நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நிறைவு பெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் தவறுதலாக முதலில் பேட்டிங் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமானது. ஏனெனில் ஆரம்பத்திலேயே 46க்கு ஆல் அவுட்டான இந்தியா சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.
அதிலிருந்து கடினமாக போராடியும் மீள முடியாத இந்தியா 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 1994ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தமது தலைமையிலான இங்கிலாந்து அணி 46க்கு ஆல் அவுட்டானதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார்.
வெல்கம் ரோஹித்:
அதே போன்ற மோசமான சாதனையை படைத்த ரோகித் சர்மாவுக்கு அவர் ஆதரவளித்துள்ளார். மேலும் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 36க்கு ஆல் அவுட் மற்றும் பெங்களூருவில் 46க்கு ஆல் அவுட்டான 2 போட்டிகளில் விராட் கோலி இருந்ததாக ஆத்தர்டன் கூறியுள்ளார். ஆனால் மிகச்சிறந்த வீரராக இருந்தும் இந்தியாவை காப்பாற்றாத அவர் அந்த 2 மோசமான சாதனைகளிலும் தம்முடைய பெயரை பகிர்ந்து கொண்டதாக ஆத்தர்டன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய உலகிற்கு வரவேற்கிறேன் ரோஹித். இந்தியாவின் அதிரடி கேப்டனுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் 46க்கு ஆல் அவுட்டான பின் ஒரு அணியை எப்படி வழி நடத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த வருடத்தின் துவக்கத்தில் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் என்னுடைய அணி 46க்கு ஆல் அவுட்டான தருணம் மறுகுறிப்பு செய்யப்பட்டது”
விராட் கோலியும் காப்பாற்றல:
“மீண்டும் அவற்றை பார்ப்பதில் ஒரு மோசமான மகிழ்ச்சி ஏற்பட்டது. டாஸ் வென்று எதிரணிக்கு பேரழிவு தரும் வகையில் முதலில் பேட் செய்த கேப்டனிடம் எல்லாம் தவறாக போகும் போது ஏன் எதிர்ப்பு இருக்கிறது? ரோஹித் சர்மா அதை சிறப்பாக எதிர்கொண்டார். இதற்கு மாறான முடிவை 2002 காபா டெஸ்ட் போட்டியில் நாசர் ஹுசைன் எடுத்த போது 364-2 என்ற நிலையிலும் அவரது பவுலர்கள் முதல் நாளிலேயே சுற்றி அடிக்கப்பட்டனர்”
இதையும் படிங்க: 2025 ஐ.பி.எல் மெகா ஏலம் எங்கு? எப்போது நடைபெறுகிறது? – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
“அடிலெய்ட் நகரில் ஆஸ்திரேலியாவிடம் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா அடுத்த 4 வருடத்திற்குள் நியூசிலாந்திடம் 46க்கு அவுட்டாகியுள்ளது. முந்தைய சங்கடம் நினைவிலிருந்து நழுவுவதற்குள் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஆழத்தில் இறங்கினர். விராட் கோலியின் பளபளப்பான கேரியரில் இப்போது இந்தியாவின் டாப் 3 குறைந்தபட்ச ஸ்கோரில் இரண்டு ஒரு பகுதியாக உள்ளது” என்று கூறினார்.