இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ மூலம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
2025-ஆண்டிற்கான ஐ.பி.எல் மெகா ஏலம் எப்போது :
அது குறித்த அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நடைபெற இருப்பதால் அது குறித்த தகவல்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட்ட பின்னர் தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மெகா ஏலமானது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மெகா ஏலம் நடைபெற இருக்கும் இடம் மற்றும் தேதி ஆகியவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வெளியிட்ட அறிவிப்பின்படி : அடுத்த ஆண்டுக்கான மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெறும் என்றும் அதற்காக தற்போது பிசிசிஐ நிர்வாக குழுவானது அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மெகா ஏலமானது நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே நவம்பர் 22 ஆம் தேதி முதல் நவம்பர் 26 ஆம் தேதி வரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதினால் அதனை ஒளிபரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் டெஸ்ட் போட்டியானது அதிகாலை 5 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடையும் என்பதனால் மதியத்திற்கு பிறகு ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஏற்கனவே 4 பேர் இருக்கும் வேளையில் 5 ஆவது ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட – என்ன காரணம்?
இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக அக்டோபர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக அடுத்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



