IPL 2023 : ட்வயன் ப்ராவோ, லசித் மலிங்கா ஆகிய ஜாம்பவான்களின் சாதனையை உடைத்த ரபாடா – புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோடைகாலத்தில் மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. கடந்த போட்டியில் ரிங்கு சிங் மேஜிக்கால் கொல்கத்தாவிடம் வெற்றியை கோட்டை விட்ட குஜராத்துக்கு இம்முறை கேப்டனாக திரும்பிய ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு முதல் ஓவரிலேயே ப்ரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் கேப்டன் ஷிகர் தவானும் 8 (8) ரன்களில் நடையை கட்டினார்.

அந்த நிலையில் அதிரடியாக விளையாட முயற்சித்த மேத்யூ ஷார்ட் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 36 (24) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் ஜிதேஷ் சர்மா 25 (23) பனுக்கா ராஜபக்சா 20 (26) என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 150 ரன்களை தாண்டாது என்று கருதப்பட்ட அந்த அணிக்கு அடுத்து வந்த சாம் கரண் 22 (22) ரன்களும் தமிழக வீரர் சாருக்கான் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 22 (9) ரன்களும் எடுத்து ஓரளவு கை கொடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் 153/8 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

ராபடாவின் சாதனை:
அதை தொடர்ந்து 154 ரன்களை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர் ரித்திமான் சஹா 5 பவுண்டரியுடன் 30 (19) ரன்கள் எடுத்து மிரட்டலான தொடக்கத்தை கொடுத்த போது காகிஸோ ரபாடாவின் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 19 (20) ஹர்திக் பாண்டியா 8 (11) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று அதிரடியாக செயல்பட்ட சுப்மன் கில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 67 (49) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் டேவிட் மில்லர் 17* ரன்களும் ராகுல் திவாடியா 5* ரன்கள் எடுத்ததால் 19.1 ஓவரில் 154/4 ரன்கள் எடுத்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட பஞ்சாப் பந்து வீச்சில் போராடியும் வெற்றி காண முடியவில்லை. இருப்பினும் இந்த தொடரில் முதல் 3 போட்டிகளில் பங்கேற்காத தென்னாபிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி 4 ஓவரில் 36 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். நவீன கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கி வரும் மகத்தான பவுலர்களில் ஒருவராக போற்றப்படும் அவர் கடந்த 2017 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.

- Advertisement -

2021 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த அவர் தற்போது பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் நிலையில் இந்த போட்டியில் எடுத்த 1 விக்கெட்டையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் தன்னுடைய 100வது விக்கெட்டை பதிவு செய்துள்ளார். குறிப்பாக 63 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ககிஸோ ரபாடா : 63* போட்டிகள்
2. லசீத் மலிங்கா : 70 போட்டிகள்
3. புவனேஸ்வர் குமார்/ஹர்ஷல் படேல் : தலா 81 போட்டிகள்

அதே போல பந்துகள் அடிப்படையிலும் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற ட்வயன் ப்ராவோ சாதனையை தகர்த்த அவர் மற்றுமொரு புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ககிஸோ ரபாடா : 1438* பந்துகள்
2. ட்வயன் ப்ராவோ : 1619 பந்துகள்
3. லசித் மலிங்கா : 1622 பந்துகள்
4. ஹர்ஷல் படேல் : 1647 பந்துகள்

இதையும் படிங்க:PBKS vs GT : யாஷ் தயாயளுக்கு பதிலாக வந்து பஞ்சாப் வெற்றியை பறித்த மூத்த வீரர் – கடைசி ஓவரில் குஜராத் வென்றது எப்படி

அப்படி ஆரம்ப முதலே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் அடுத்து வரும் போட்டிகளில் அசத்தி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வருவாரா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement