- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பொருத்தமற்ற கில்லுக்காக மொத்த டீமையும் கெடுத்துட்டீங்க.. அவரை விட கில் சிறந்த டி20 பிளேயாரா? ஸ்ரீகாந்த் கேள்வி

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 3வது போட்டி நவம்பர் 2ஆம் தேதி ஹோபார்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்தியா போராட உள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் இதுவரை பெரிய ரன்கள் குவிக்காத சுப்மன் கில் எதன் அடிப்படையில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்? என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கில் 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்கத் தடுமாறினார். அதனாலேயே ஒரு கட்டத்திற்கு பின் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

பொருத்தமற்றவருக்கு கேப்டன்ஷிப்:

மறுபுறம் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனாவில் சதத்தை அடித்த ஜெய்ஸ்வால் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். அதே போல சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் 3 சதங்கள் அடித்து அபாரமாக செயல்பட்டார். ஆனால் அவர்களை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை வருங்கால கேப்டனாக நியமிப்பதற்காக இப்போதே துணை கேப்டனாக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பையும் கொடுத்துள்ளது.

இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் கில்லை விட ஜெய்ஸ்வால் தரமான வீரர் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் கில்லுக்காக மொத்த இந்திய அணியையும் கலைத்துள்ள கௌதம் கம்பீர் புதிய அணியை உருவாக்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணி கில்லை அடுத்த 3 போட்டிகளிலும் நீக்க மாட்டார்கள். அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை”

- Advertisement -

ஸ்ரீகாந்த் கேள்வி:

“அடுத்த டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கில் வருங்கால டி20 கேப்டன் என்பதும் தீர்மானிக்கப்பட்டது. எனவே அவரைச் சுற்றி அணியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில் கில் இன்றியமையாத வீரரா? எதன் அடிப்படையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்? வாய்ப்புக்காக காத்திருக்கும் ஜெய்ஸ்வால் அணியில் கூட இல்லை”

“கில் சேர்க்கப்பட்டதால் இந்திய அணியின் மொத்த சமநிலையும் கெட்டுள்ளது. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திலக் வர்மாவுக்கு நிலையான இடமில்லை. அர்ஷ்தீப் சிங்கிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பில்லை. இந்தியாவிடம் அபிஷேக் ஷர்மா போன்ற நிறைய வீரர்கள் உள்ளனர்”

இதையும் படிங்க: பும்ராவுக்கு கூட ரெஸ்ட் குடுங்க.. ஆனா ஆனா இவரை தொடர்ச்சியா விளையாட வையுங்க – அஷ்வின் வேண்டுகோள்

“வாய்ப்புக்காக காத்திருக்கிக்கும் ஜெய்ஸ்வாலுக்கு அணிக்குள் வருவதற்கான கதவே திறக்கவில்லை. தற்சமயத்தில் ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து யாராலும் வர முடியாது. ஆல் ஃபார்மட் மற்றும் ஐபிஎல் தொடரில் நல்ல ரெக்கார்ட் வைத்திருந்தும் ஜெய்ஸ்வாலுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? என்று தெரியவில்லை. அவருக்கும் அதே வாய்ப்பை கொடுத்தால் எதிரணி டாப் பவுலர்களை நொறுக்குவார்” என்று கூறினார்.

- Advertisement -