பும்ராவுக்கு கூட ரெஸ்ட் குடுங்க.. ஆனா ஆனா இவரை தொடர்ச்சியா விளையாட வையுங்க – அஷ்வின் வேண்டுகோள்

Ashwin and Bumrah
- Advertisement -

2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அருகில் வர இருக்கும் வேளையில் இந்திய டி20 அணியில் தற்போது பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வந்தாலும் அடுத்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக சிறந்த காம்பினேஷனை கண்டறிய பல்வேறு சோதனைகள் இந்திய அணியில் நடைபெற்ற வருகின்றன. ஆனால் அதெல்லாம் சற்று வித்தியாசமான முறையில் நடைபெற்று வருவதாக சில விமர்சனங்களும் இருந்து வருகின்றன.

அவருக்கு ஏன் ரெஸ்ட் குடுக்கிறீங்க : ரவிச்சந்திரன் அஷ்வின்

ஏனெனில் யாரை எந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும்? என்பது குறித்து பல்வேறு சோதனைகள் நடைபெற்றாலும் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பங்கு அதில் அதிகம் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக திறமையான வீரர்களை விட்டுவிட்டு சோதனை என்கிற பெயரில் தேவையில்லாத வீரர்களை அணிக்குள் அவர் கட்டாயமாக கொண்டு வந்து விளையாட வைப்பதாக பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் முக்கிய மாற்றமாக இந்திய டி20 அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் வெளியில் அமர வைக்கப்பட்டு ஹர்ஷித் ராணாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் இந்த தொடரில் இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் வெளியில் அமர வைக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாடி வருகிறார்.

இந்த மாற்றம் இந்திய அணிக்கு தேவையா? என்பது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : கடந்த ஓராண்டாகவே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் தற்போது வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் தற்போதைய பிளேயிங் லெவனில் இல்லை என்பது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

- Advertisement -

பும்ரா அணியில் இருந்த போதும் அவரால் விக்கெட்டை பெரியளவில் எடுக்க முடியவில்லை. ஆனால் அர்ஷ்தீப் சிங் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். எனவே அவர் அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இந்திய அணியில் தற்போது அர்ஷ்தீப் சிங் இடம்பெறாமல் மீண்டும் அணிக்குள் வந்தார் அவருடைய மனநிலை என்னவாகும்? என்பதை என்னால் யோசிக்க முடியவில்லை.

இதையும் படிங்க : முதல் பந்திலே சுப்மன் கில் அவுட்டாகி இருக்கனும்.. கில்லின் ஆட்டம் குறித்து விமர்சித்த – சீக்கா ஸ்ரீகாந்த்

தொடர்ந்து ரெஸ்ட்டில் இருந்து மீண்டும் அவர் அணிக்கு வந்து விளையாடும் போது நன்றாக விளையாட வேண்டும் என்று அழுத்தம் உருவாகும். அந்த அழுத்தமே அவரை மோசமான நிலைக்கும் அழைத்துச் செல்லும். ஆனால் அதனை எல்லாம் தவிர்த்து அவர் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். வேண்டுமென்றால் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து அவரை தொடர்ந்து விளையாட வையுங்கள் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement