முதல் பந்திலே சுப்மன் கில் அவுட்டாகி இருக்கனும்.. கில்லின் ஆட்டம் குறித்து விமர்சித்த – சீக்கா ஸ்ரீகாந்த்

Kris Srikkanth
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது அக்டோபர் 31-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த டி20 தொடரிலும் முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.

சுப்மன் கில் முதல் பந்தில் ஆட்டமிழந்திருக்கனும் : சீக்கா ஸ்ரீகாந்த்

இந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கிய சுப்மன் கில் 10 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் அளித்த இந்த மோசமான தொடக்கம் இந்திய அணியின் சரிவுக்கும் மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

- Advertisement -

பவர் பிளேவிற்கு உள்ளாகவே இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் அதிலிருந்து மீள முடியாமல் பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது சுப்மன் கில் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க வேண்டியிருந்திருக்கும் என அவரது பேட்டிங்கை விமர்சித்து முன்னாள் இந்திய கேப்டனான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் ஒரே ஒரு பந்துவீச்சாளரை வைத்து இந்திய அணியை வீழ்த்தி விட்டது. ஜாஸ் ஹேசல்வுட் தனி ஒரு ஆளாக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை முறித்துவிட்டார். சுப்மன் கில் இந்த போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டியிருந்திருக்கும். அந்த அளவிற்கு மோசமான ஷார்ட் செலெக்சன் அவரிடம் இருந்தது.

- Advertisement -

பின்னர் ஹெல்மெட்டில் பந்து பட்டதும் என்ன செய்வது என்று தெரியாமல் விளையாடிய அவர் தேவையில்லாமல் ஒரு சாட்டை ஆடி ஆட்டமிழந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய மண்ணில் இருக்கும் கூடுதலான பவுன்ஸ் இந்திய பேட்ஸ்மன்களுக்கு சிரமத்தை தந்ததாக பார்க்கிறேன். ஆனாலும் அபிஷேக் ஷர்மா அதனை மிகச் சிறப்பாக கையாண்ட வேளையில் அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.

இதையும் படிங்க : 42 வருடங்கள் கழித்து பஸ்பால் இங்கிலாந்தை மொத்தமாக சாய்த்த.. நியூஸிலாந்து சாதனை வெற்றி

இந்திய அணி பேட்டிங் செய்த 111 பந்துகளில் 37 பந்துகளை மட்டுமே அவர் பிடித்திருந்தார். அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க யாரும் இல்லை. இந்திய வீரர்கள் நன்றாக பவுன்ஸ் ஆகி வரும் இந்த மைதானத்தில் விளையாடுவதில் கஷ்டப்பட்டு வரும் வேளையில் அவர் எளிதாக விளையாடினார் என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement