205 சேசிங்.. புத்தாண்டில் சூப்பர் ஓவரில் வரலாற்றுச் சாதனை படைத்த ஜேஎஸ்கே.. டர்பனை சாய்த்து த்ரில் வெற்றி

JSK team
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் 2025/26 எஸ்ஏ20 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் 2026 புத்தாண்டில் ஜனவரி 1ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் மைதானத்தில் 9வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் சென்னையின் கிளை அணிகளான டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மோதின.

அப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேஎஸ்கே 20 ஓவரில் 205/4 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மேத்தியூ டீ வில்லியர்ஸ் 38 (26), கேப்டன் டு பிளேஸிஸ் 47 (30), சுபம் ரன் ஜனே 50* (31) ரன்கள் குவித்தனர். அவர்களைக் காட்டிலும் கடைசி நேரத்தில் பட்டாசாக விளையாடிய டோனவன் பெரீரா 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 33* (10) ரன்கள் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

சூப்பர் ஓவரில்:

டர்பன் அணிக்கு அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அடுத்து விளையாடிய டர்பன் அணியும் கடுமையாக போராடி 20 ஓவரில் மிகச்சரியாக 205/8 ரன்களை எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதிகபட்சமாக எவன் ஜோன்ஸ் 43 (17), ஹென்றிச் க்ளாஸென் 29 (19), கேப்டன் மார்க்ரம் 37 (30) ரன்கள் எடுத்தனர். ஜேஎஸ்கே அணிக்கு அதிகபட்சமாக ரிச்சர்ட் க்லீசன் 3, ஆக்கில் ஹுசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

குறிப்பாக கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது சைமன் ஹார்மர் ரன் அவுட்டானதால் போட்டியில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் ரிச்சர்ட் கிளீசனுக்கு எதிராக டர்பன் 5/1 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்ததாக நூர் அஹ்மத் வீசிய சூப்பர் ஓவரில் 4, 0, 4 என 2 பவுண்டரிகளை ரிலீ ரோசவ் பறக்க விட்டார்.

- Advertisement -

ஜேஎஸ்கே சாதனை வெற்றி:

அதனால் 2026 புத்தாண்டு தினத்தில் டர்பன் அணியை சூப்பர் ஓவரில் சாய்த்த ஜேஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் 2022 முதல் நடைபெற்று வரும் எஸ்ஏ20 தொடரில் இப்போட்டியில் தான் முதல் முறையாக சூப்பர் ஓவர் நடந்தது. அதில் வென்ற ஜேஎஸ்கே எஸ்ஏ20 தொடரில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.

இதையும் படிங்க: இன்னும் 3 ரன்கள் போதும்.. நியூசிலாந்து அணிக்கெதிராக ரோஹித் சர்மா நிகழ்த்தப்போகும் – அசத்தல் சாதனை

அந்த வகையில் புத்தாண்டில் ஜேஎஸ்கே சூப்பர் ஓவரில் அற்புதமான வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய பெரீரா ஆட்டநாயகன் விருதை வென்றார். அதையும் சேர்த்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் ஜேஎஸ்கே 3 வெற்றிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement