இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருந்தது. அதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
ரோஹித் சர்மா நிகழ்த்த இருக்கும் சாதனை :
இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணையும் வெளியாகி தற்போது வீரர்கள் அனைவரும் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.
இவ்வேளையில் ஜனவரி 3-ஆம் தேதியோ அல்லது ஜனவரி 4-ம் தேதியோ இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. அப்படி வெளியாகப்போகும் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம் பெறுவார்கள்.
இதன் காரணமாக இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதம் மற்றும் 5 அரைசதம் என 997 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 147 ரன்கள் அடித்ததே அந்த அணிக்கு எதிராக அவர் அடித்த அதிகபட்ச ரன்களாகும்.
இதையும் படிங்க : இந்திய அணியின் 2026 டி20 உ.கோ லீக் போட்டிகளை யாருமே பாக்க மாட்டாங்க.. காரணம் இதான்.. அஸ்வின் ஓப்பன்டாக்
இந்நிலையில் எதிர்வரும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேலும் அவர் 3 ரன்களை அடிக்கும் பட்சத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் என்ற எலைட் பட்டியலில் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.



