மும்பை வாங்கிய பாண்டியாவுக்கு மட்டும் ஒரு நியாயமா.. கொல்கத்தா டீம் டைரக்டர் கொதிப்பு

- Advertisement -

ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறுகிறது. அதில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டு தேவையான முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கியது. அந்த வரிசையில் முன்னாள் சாம்பியன் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வலுக்கட்டாயமாக வாங்கியது அனைத்து ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியில் தம்முடைய ஐபிஎல் பயணத்தை 2015இல் துவங்கிய அவர் 2021 வரை 4 கோப்பைகளை வெல்வதற்கு ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றினார்கள். ஆனால் அதன் பின் காயத்தால் ஃபார்மை இழந்து தடுமாறிய அவரை மும்பை கழற்றி விட்ட நிலையில் குஜராத் 15 கோடிக்கு வாங்கி தங்களுடைய கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

மோசமான ஐடியா:
அந்த வாய்ப்பில் முதல் சீசனிலேயே மிகச் சிறந்த ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்திய பாண்டியா குஜராத்துக்கு கோப்பையை வென்று கொடுத்து அடுத்த சீசனில் ஃபைனல் அழைத்துச் சென்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் நிலையில் பாண்டியா மும்பைக்காக வாங்கப்பட்டது ஏன் என்ற கேள்வி காணப்படுகிறது.

இந்நிலையில் 2010 சீசனில் ரவீந்திர ஜடேஜா கிட்டத்தட்ட இதே போல மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்படுவதற்கு தயாராக இருந்ததை கடைசி நேரத்தில் ஐபிஎல் நிர்வாகம் கண்டறிந்து தடை செய்ததாக முன்னாள் கொல்கத்தா அணியின் இயக்குனர் ஜாய் பட்டாச்சார்யா கூறியுள்ளார். தற்போது அதே போல ஹர்திக் பாண்டியாவின் ட்ரேடிங் அமைந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் வருங்காலங்களில் இது போன்ற நேர்மையற்ற யுக்திகளை மற்ற அணிகளும் வீரர்களை வாங்குவதற்கு கடை பிடிக்கலாம் என்று அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஐபிஎல் தொடருக்கு இது நல்ல ஐடியா என்று எனக்கு தோன்றவில்லை. கிட்டத்தட்ட இதே போன்ற நிகழ்வு 2010இல் நடந்தது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா ஒரு அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போது மற்ற அணிக்கு செல்ல விரும்பினார். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு மேற்கொண்டு விளையாட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்ததால் தடை பெற்றார்”

இதையும் படிங்க: எப்போ பாரு எதையாவது பேசுவதே வேலையா? விராட் கோலி – ரோஹித் சர்மா வருங்காலம் பற்றி கபில் தேவ் பதிலடி

“அதே போல ஒரு வீரர் நான் ஏலத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்று சொல்வதை நீங்கள் அங்கீகரித்தால் அது வருங்காலத்திற்கு நல்ல ஐடியா கிடையாது. அதனால் தான் இந்த நடைமுறை கடந்த 2010இல் நிறுத்தப்பட்டது. ஆனால் 2023இல் நீங்கள் அதை ஒரு பெரிய வீரருக்கு அனுமதித்துள்ளீர்கள். இதை நீங்கள் அனுமதித்தால் இதர வீரர்களும் தாங்கள் விளையாடும் அணியிலிருந்து அதிக பணத்திற்காக வெளியேற விரும்புவார்கள். இது ஐபிஎல் தொடருக்கு நல்லதல்ல” என்று கூறினார்.

Advertisement