GT vs KKR : மேட்சுக்கு முன்னாடி தான் ஹார்டிக் பாண்டியா கிட்ட அந்த பிளான் பத்தி பேசுனேன் – ஆட்டநாயகன் ஜாஷ் லிட்டில் பேட்டி

Josh-Little
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-ஆவது லீக் ஆட்டத்தில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தங்களது அணியின் முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

GT vs KKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரஹமனுல்லா குர்பாஸின் அதிரடியான ஆட்டம் காரணமாக மளமளவென ரன்களை சேர்த்தது. பின்னர் இறுதி நேரத்தில் ரசலும் அதிரடி காட்டியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

கொல்கத்தா அணி சார்பாக குர்பாஸ் 81 ரன்கள், ரசல் 34 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 எண்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் குவித்து ஏழ விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

Josh Little 1

இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக நான்கு ஓவர்களை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ் லிட்டில் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய ஆட்டநாயகன் ஜாஸ் லிட்டில் கூறுகையில் : இந்த போட்டிக்கு முன்பாக தான் நான் ஹார்டிக் பாண்டியாவிடம் பேசினேன். அது என்னவென்றால் இந்த போட்டியில் நான் என்னுடைய பவுலிங்கை மிகவும் சிம்பிளாக வைக்க போகிறேன். ஹார்ட் லென்ந்தில் பந்து வீசினால் நிச்சயம் இந்த மைதானத்தில் சாதகம் கிடைக்கும் என்று அவரிடம் கூறினேன்.

இதையும் படிங்க : GT vs KKR : அவரு அடிச்ச அடியை பாத்து நான் பயந்துட்டேன். வெற்றிக்கு பிறகு கொல்கத்தா வீரரை பாராட்டிய – ஹார்டிக் பாண்டியா

அந்த வகையில் நான் அதே இடத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. அதேபோன்று இந்த ஐபிஎல் தொடரின் முதல் அறிமுக போட்டியில் நான் சற்று பதட்டமாக இருந்தாலும் தற்போது பதட்டம் எல்லாம் நீங்கி தெளிவான மனநிலையுடன் இருக்கிறேன் என ஜாஸ் லிட்டில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement