GT vs KKR : அவரு அடிச்ச அடியை பாத்து நான் பயந்துட்டேன். வெற்றிக்கு பிறகு கொல்கத்தா வீரரை பாராட்டிய – ஹார்டிக் பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

GT vs KKR

- Advertisement -

அதன்படி இன்று மதியம் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தனர்.

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் குர்பாஸ் 81 ரன்களையும், ரசல் 34 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது துவக்க முதலிலேயே அதிரடி காட்டி 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 எண்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பிரமாதமான வெற்றியை பெற்றது.

Gurbaz

இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 49 ரன்களையும், தமிழக வீரர் விஜய் சங்கர் 51 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பேசுகையில் கூறியதாவது : இந்த போட்டியில் குர்பாஸ் ஆடிய ஆட்டத்தை பார்க்கும்போது பதட்டமாகவே இருந்தது.

- Advertisement -

இருந்தாலும் ஜாஸ் லிட்டில் மற்றும் நூறு அஹமத் ஆகியோர் மீண்டும் எங்களது அணியை போட்டிக்குள் கொண்டு வந்தனர். அவர்கள் இருவருமே நல்ல பந்துகளை வீசியிருந்தனர். அதோடு குர்பாஸ் ஆடிய விதத்தை பார்க்கும்போது மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் ஆடிய ஆட்டம் தெளிவாகவும், பவராகவும் இருந்தது. இப்படி ஒரு வீரர் 39 பந்துகளில் 81 ரன்களை குவித்து விட்டு 180 ரன்களுக்குள் சுருட்டியதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க : GT vs KKR : குர்பாஸ், ரசல் தவிர்த்து நாங்க எல்லாருமே தப்பு பண்ணிட்டோம். தோல்விக்கு பிறகு தவறை ஒப்புக்கொண்ட – நிதீஷ் ராணா

அதோடு இந்த 180 ரன்கள் என்கிற இலக்கினை நாங்கள் நிச்சயம் ஏற்றுக் கொண்டு சேசிங் செய்வோம் என்றும் நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே தங்களது பங்களிப்பினை தந்து இந்த வெற்றியினை பெற்று தந்துள்ளனர் என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement