- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 ஆவது நாள் ஆட்டத்தில் ஒரே ஓவர் வீசிய கையோடு ஹாஸ்பிட்டலுக்கு சென்ற ஜாஷ் ஹேசல்வுட் – என்ன ஆனது?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் ஹேசல்வுட் இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தில் ஒரு ஓவர் வீசிய கையோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

காயமடைந்த ஆஸ்திரேலிய அணியின் வீரர் :

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய ஜாஷ் ஹேசல்வுட் அடுத்ததாக அடிலெய்டு நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது காயம் காரணமாக பங்கேற்கவில்லை.

- Advertisement -

பின்னர் மீண்டும் அவர் இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு திரும்புவது கடினம் என்று பேசப்பட்டது. ஆனால் இரண்டாவது போட்டி முடிந்த கையோடு 10 நாட்கள் இடைவெளி இருந்ததால் மீண்டும் சிறப்பான முறையில் தயாராகி வந்த ஹேசல்வுட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தார்.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சின் போது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை ஆட்டமிழக்க செய்திருந்தார். இந்நிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று காலை போட்டிக்கு தயாராகும் போது நடைபெற்ற பயிற்சியில் கணுக்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதை உணர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ஆனாலும் தான் மைதானத்திற்கு வந்து விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசும் போதே அவருக்கு கணுக்கால் வலி அதிகமாகியுள்ளது. இதன் காரணமாகவே அந்த ஓவரை முடித்த அவர் நேரடியாக ஸ்கேன் பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய கம்மின்ஸ் – விவரம் இதோ

ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவர் இந்த போட்டியில் தொடர்வாரா? என்பதும், இந்த தொடரில் இருந்து வெளியேறுவாரா? என்பதும் தெரியவரும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -