- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான எஞ்சியுள்ள தொடரிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர் – இந்திய அணிக்கு சாதகம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிரஸ்பேன் நகரில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு நாள் ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்துள்ளது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது :

எஞ்சியுள்ள தொடரிலிருந்து விலகிய ஆஸி வீரர் :

9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 193 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் கடைசி நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கும் இந்திய அணியானது விரைவிலேயே ஆட்டமிழந்து விடும் என்பதனால் இந்த போட்டி தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.

- Advertisement -

நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி விரைவாக ரன்களை குவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைக்கும். அப்படி அழைக்கும் பட்சத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை இழக்காமல் நாளைய போட்டியை முடித்தால் போட்டி டிராவில் முடிவடையும்.

இந்நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் ஹேசல்வுட் ஒரு ஓவர் மட்டுமே வீசிய நிலையில் மைதானத்திலிருந்து கணுக்கால் காயம் காரணமாக வெளியேறினார். அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

அப்படி எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால் இந்த நான்காவது போட்டியில் அவர் தொடர்ந்து பந்து வீசமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காயத்தின் தன்மை அதிகரித்துள்ளதால் அவர் இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் யாரும் செய்யாத தனித்துவமான சாதனை செய்து வரலாறு நிகழ்த்திய – கேன் வில்லியம்சன்

அவருக்கு பதிலாக ஏற்கனவே அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்காட் போலந்து மீண்டும் முதன்மை ஆஸ்திரேலிய அணியில் இணைவார் என்றும் தெரிகிறது.

- Advertisement -