
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லாத அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதனால் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் என அந்த அணியின் ரசிகர்கள் புகழ்பாடி வந்தனர்.
குறிப்பாக 2025 தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 11 லீக் ஆட்டங்களில் எட்டு வெற்றிகள் பெற்றுள்ள ஆர்.சி.பி அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் வேளையில் இன்னும் எஞ்சியுள்ள மூன்று ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட அந்த அணி முதலிரண்டு இடங்களுக்குள் ஒன்றினை பிடித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவது உறுதி. ஆனால் தற்போது ஐபிஎல் தொடரானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் இந்த ஐபிஎல் தொடரானது இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சூழல் எவ்வாறு அமைகிறதோ அதனை பொறுத்தே எஞ்சியுள்ள தொடர் நடைபெறுமா? நடைபெறாதா? என்பது தெரியவரும். ஆனாலும் இந்த மாதத்திற்குள் இந்த ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ முனைப்பு காட்டி வருகிறது.
இதன்காரணமாக வெகு விரைவில் இந்த ஐபிஎல் தொடரானது மீண்டும் ஆரம்பித்து எஞ்சியுள்ள போட்டிகளை நிறைவு செய்து கோலாகலமாக இந்த ஆண்டை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் அடுத்த வாரம் ஆரம்பித்து மே மாதம் 30 ஆம் தேதிக்குள் முடிவடைய இருப்பதாக கூறப்பட்டு வரும் வேளையில் இந்த ஐபிஎல் தொடர் மீண்டும் ஆரம்பித்தாலும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் ஹேசல்வுட் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் சென்னை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் காயமடைந்த அவர் அடுத்தடுத்த போட்டிகளை தவறவிட்ட வேளையில் தற்போது நாடு திரும்பியிருக்கும் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்காக தயாராகி வருவதால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் ஐபிஎல் தொடரை விட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி முக்கியம் என்பதனால் ஆஸ்திரேலியா அணி அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்காது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரோஹித் , விராட்டை தொடருந்து 3 ஆவதாக ஒரு சீனியர் வீரரை டெஸ்ட் போட்டிகளில் இருந்து கழட்டிவிட – பி.சி.சி.ஐ முடிவு
அதன் காரணமாகவும் அவர் எஞ்சியுள்ள இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்றாலும் அணியில் இணைய மாட்டார் என்று கூறப்படுகிறது. அப்படி ஜாஷ் ஹேசல்வுட் மீண்டும் எஞ்சியுள்ள இந்த தொடரில் விளையாடவில்லை எனில் அது ஆர்.சி.பி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.