சாக்கு சொல்ல விரும்பல. இலங்கை அணிக்கெதிராகவும் நாங்க தோக்க இதுதான் காரணம் – ஒப்புக்கொண்ட ஜாஸ் பட்லர்

Buttler
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50-ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டியானது இன்று அக்டோபர் 26-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது இலங்கை அணியை அதிரடியாக எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று நினைத்து முதல் 5 ஓவர்களில் போட்டியை அதிரடியாக துவங்கினாலும் அதன் பின்னர் 7 ஆவது ஓவரில் முதல் விக்கெட்டை இழக்க அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வீரர்கள் மைதானத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். இதன் காரணமாக 33.2 ஓவர்களில் இங்கிலாந்து அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 156 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 43 ரன்களையும், பார்ஸ்டோ 30 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 25.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக துவக்க வீரரான பதும் நிசாங்கா 77 ரன்களுடனும், சதீரா சமர விக்ரமா 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இப்படி தங்கள் விளையாடிய முதல் 5 போட்டிகளில் நான்காவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ள வேளையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்த தோல்வி உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று. ஒரு கேப்டனாக எனக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதோடு எங்களது அணி வீரர்களுக்கும் இந்த தோல்வி பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

- Advertisement -

நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டின் பாதி அளவை கூட இந்த போட்டியில் வெளிப்படுத்தவில்லை. அனுபவ வீரர்கள் எங்களிடம் நிறைந்து இருந்தாலும் அந்த அனுபவத்திற்கு ஏற்ற செயல்பாடு எங்களிடமிருந்து வெளி வரவில்லை. ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது. இருந்தாலும் ஒரு பதட்டமான வேளையில் இது போன்ற தோல்விகள் நடைபெறுகின்றன. எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை பகுதியளவு கூட வெளிப்படுத்த முடியாததாலே இதுபோன்ற தொடர் தோல்விகள் நிகழ்ந்து வருகின்றன.

இதையும் படிங்க : இது சாம்பிள் தான். இன்னும் 4 மேட்ச் இருக்கு.. அதுல 3 ஜெயிச்சா கூட போதும் – வெற்றிக்கு பிறகு குசால் மெண்டிஸ் பேசியது என்ன?

இந்த போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கான காரணத்தை இதுதான் என்று சுட்டிக் காட்டுவதற்கு எதுவும் இல்லை. எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை அது மட்டுமே ஒரு குறையாக இருக்கிறது. மற்றபடி அணி தேர்வில் எந்த ஒரு குறையும் இல்லை. எங்களுடைய திறனுக்கு ஏற்ப நாங்கள் எங்களுடைய செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த போட்டியில் நிறைய தவறுகளை செய்து விட்டோம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே எங்களது தரத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்படவில்லை. இனிவரும் போட்டிகளில் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம் என ஜாஸ் பட்லர் வருத்தத்துடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement