IND vs ENG : அவங்க மேல எந்த தப்பும் இல்ல. இந்த மோசமான தோல்விக்கு இதுதான் காரணம் – பட்லர் வருத்தம்

Buttler
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியை அபாரமாக கைப்பற்றிய இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து டெஸ்ட் தொடரில் கிடைக்காத வெற்றியை எப்படியாவது டி20 தொடரில் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த ரோஹித்தின் தலைமையிலான இந்திய அணியானது இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் 49 முதல் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்தது. இதன் மூலம் இந்த டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி தற்போது 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஜடேஜா, ரோஹித், ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 170 ரன்களை குவித்தது. பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியால் 121 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

இதன் காரணமாக 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்த இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்த போட்டியில் பெற்ற தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் எந்த இடத்திலுமே நாங்கள் விளையாட நினைத்தபடி விளையாட முடியவில்லை.

- Advertisement -

இந்த தோல்வி கிடைத்தது எங்களுக்கு சரியான ஒன்றுதான். எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் பேட்டிங்கின் போது பவர் பிளேவில் மூன்று விக்கட்டுகளை இழந்ததால் அதனை ஈடுகட்ட எங்களால் முடியவில்லை. இந்த போட்டியில் அறிமுக வீரரான கிளீசன் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்தது.

இதையும் படிங்க : ஒருத்தர் மட்டும் கடைசி வரை விளையாடணும்னு நெனச்சோம். அதை அவரு சரியா பண்ணிட்டாரு – ரோஹித் மகிழ்ச்சி

அதோடு க்றிஸ் ஜோர்டானும் அருமையாக பந்து வீசினார். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மீது எவ்வித தவறும் இல்லை. இது முற்றிலுமாக நாங்கள் பேட்டிங்கில் செய்த தவறு காரணமாக ஏற்பட்ட தோல்வி தான். பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம். அடுத்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement