ஒருத்தர் மட்டும் கடைசி வரை விளையாடணும்னு நெனச்சோம். அதை அவரு சரியா பண்ணிட்டாரு – ரோஹித் மகிழ்ச்சி

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 170 ரன்களை அடித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரவிந்திர ஜடேஜா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 46 ரன்களையும், துவக்க வீரரான ரோகித் சர்மா 31 ரன்களையும் குவித்து அசத்தினார்.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

- Advertisement -

பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 121 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 49 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார் 3 விக்கட்டுகளையும், பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : எங்களுக்கு இங்கிலாந்து அணியை பற்றி தெரியும். அவர்கள் இங்கிலாந்து மண்ணில் மட்டும் இன்றி உலகில் எங்கு விளையாடினாலும் மிக சிறப்பான அணி.

Ravindra Jadeja IND vs ENg

அவர்களுக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது. இது போன்ற சவால் நிறைந்த ஆட்டங்களை தான் நாங்கள் எதிர்பார்த்து விளையாடுகிறோம். இந்த போட்டியில் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது மிகச் சிறப்பான ஒன்று. இந்த போட்டியில் நாங்கள் ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

- Advertisement -

அதன்படி ஜடேஜா ஏற்கனவே இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த போட்டியிலும் இறுதிவரை களத்தில் நின்று எங்களுக்காக ரன்களை சேர்த்தார். அவரது பேட்டிங் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வருடங்கள் விளையாடிய டாப் 5 நட்சத்திர ஜாம்பவான்களின் பட்டியல்

மேலும் பவர் பிளேவில் ரன்கள் சேர்ப்பது என்பது எப்போதுமே முக்கியம். அந்த வகையில் இந்த போட்டியிலும் நாங்கள் பவர்பிளேவில் மிகச்சிறப்பாக விளையாடியதாக உணர்வதாக ரோகித் சர்மா வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சியுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement