- Advertisement -
ஐ.பி.எல்

என் சதத்தை பற்றி கவலைப்படாதன்னு அவர்கிட்ட சொன்னேன்.. 97 ரன்ஸ் 2 பாய்ண்ட்ஸ் பெற இதான் காரணம்.. பட்லர்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 35வது போட்டியில் குஜராத் அணி டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 31, கேஎல் ராகுல் 28, கேப்டன் 39, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 31, அசுட்டோஸ் சர்மா 37 ரன்கள் எடுத்தனர்.

குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய குஜராத் ஆரம்பம் முதலே நேர்த்தியாக பேட்டிங் செய்து 19.2 ஓவரில் 204/3 ரன்கள் எடுத்து தங்களுடைய ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக சாய் கிஷோர் 31, ஜோஸ் பட்லர் 97*, ரூதர்போர்ட் 43 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் பட்லர்:

இந்த வெற்றியால் குஜராத் அணி டெல்லியை முந்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. இந்த வெற்றிக்கு சதத்தை நழுவ விட்டாலும் 97 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடைசி நேரத்தில் தமது சதத்தை பற்றி கவலைப்படாமல் பினிஷிங் செய்யுமாறு ராகுல் திவாட்டியாவிடம் சொன்னதாக பட்லர் கூறியுள்ளார்.

அதைப் பயன்படுத்தி 11* (3) ரன்கள் அடித்த அவரால் கிடைத்த 2 வெற்றிப் புள்ளிகள் தமது சதத்தை விட முக்கியமானது என்றும் பட்லர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் போட்டியில் தமது பேட்டிங் திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2 புள்ளிகளால் மிகவும் மகிழ்ச்சி. பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்த இந்த பிட்ச்சில் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று எங்கள் தருணங்களில் அட்டாக் செய்ய முயற்சித்தோம்”

- Advertisement -

சதத்தை விட முக்கியம்:

“அப்படியே சென்ற வழியில் நாங்கள் சில நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். இங்கே நிலவிய வெப்பத்தை சமாளிக்க குடித்த தண்ணீரும் அது வியர்வையாக வெளியே வந்த விதமும் ஆச்சரியம் அளித்தது. எனக்கு லேசான தசைப் பிடிப்பு ஏற்பட்டது விளையாட்டின் ஒரு அங்கம். வெப்பம், அழுத்தத்துக்கு கீழே நீங்கள் நன்றாக செயல்பட ஃபிட்டாக இருப்பது அவசியம்”

இதையும் படிங்க: 14 வயது 23 நாட்களில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி – மேலும் ஒரு சரித்திர சாதனை

“முதல் 6 போட்டிகளில் சுமாராக பேட்டிங் செய்ததால் இன்று அசத்த வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். ரூதர்போர்ட் உடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பேட்டிங் செய்தேன். தூரமாக சிக்ஸர்களை அடித்த அவர் மோஹித் சர்மாவுக்கு எதிராக அடித்த சிக்ஸர் போட்டியை மாற்றியது. சதத்தை அடிக்க எனக்கு வாய்ப்பு இருந்தாலும் போட்டியை வென்று 2 புள்ளிகளைப் பெறுவது முக்கியம். அதனால் எனது ஸ்கோரைப் பற்றி கவலைப்படாமல் வெற்றி பெறுமாறு ராகுலிடம் சொன்னேன். கடந்த சில வருடங்களாகவே முதல் பந்திலிருந்தே பௌண்டரிகளை பறக்க விடும் அவருக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -