லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 19-ஆம் தேதி இன்று நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
வைபவ் சூர்யவன்ஷி நிகழ்த்திய சரித்திர சாதனை :
அதனை தொடர்ந்து தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகியதால் மீண்டும் ரியான் பராக் கேப்டன் பொறுப்பை கையில் எடுத்துள்ளார்.
காயமடைந்த சஞ்சு சாம்சனுக்கு பதிலாக மாற்று வீரராக வைபவ் சூர்யவன்ஷி அணிக்குள் வருகிறார் என டாசுக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தெரிவித்து விட்டார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் இம்பேக்ட் வீரராக வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. இப்படி லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியின் மூலம் அறிமுகமான சூரியவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தற்போது வைபவ் சூர்யவன்சிக்கு 14 வயது 23 நாட்களே ஆகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு பிறந்த வைபவ் சூரியவன்ஷி தனது 12-ஆவது வயதிலேயே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். அதன்பிறகு அதே 12 வயதில் ரஞ்சி தொடரிலும் அறிமுகமாகி மிக இளம் வயதிலேயே ரஞ்சி தொடரில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது 13 வயதாக இருந்த அவரை 1 கோடியே 10 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்திருந்த வேளையில் தற்போது சரியாக 14 வயது 23 நாட்களில் அவருக்கு அறிமுக வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
இப்படி இளம் வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி மேலும் ஒரு சரித்திர சாதனையை முதல் நபராக நிகழ்த்தியுள்ளார். அதாவது ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வேளையில் ஐபிஎல் தொடர் அறிமுகமான ஆண்டிற்கு பிறகு பிறந்த ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடயிருப்பது இதுவே முதல் முறை.
இதையும் படிங்க : ரிலாக்ஸ் பண்ண விடமாட்டாரு.. கேப்டன் தோனிக்கு எதிரா சாதிக்க கால்விரலில் நிற்கனும்.. ரோஹித் பேட்டி
அப்படி ஒரு சரித்திர சாதனையையும் வைபவ் சூரியவன்ஷி இந்த போட்டியின் மூலம் நிகழ்த்தியுள்ளார். இப்படி ஒரு சரித்திர சாதனையுடன் களமிறங்க காத்திருக்கும் அவரது ஆட்டம் இந்த போட்டியில் எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



