ரிலாக்ஸ் பண்ண விடமாட்டாரு.. கேப்டன் தோனிக்கு எதிரா சாதிக்க கால்விரலில் நிற்கனும்.. ரோஹித் பேட்டி

Rohit Sharma
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இருபதாம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் தலா 5 கோப்பைகளை வென்றுள்ள சென்னையும் மும்பையும் வெற்றிகரமான அணிகளாக சாதனை படைத்துள்ளன. இருப்பினும் இந்த வருடம் அவ்விரு அணிகளுமே தடுமாற்றமாக விளையாடி வருகின்றன.

அதில் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் மும்பை 4 தோல்வி 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது. எனவே இந்த வருடம் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த சென்னையை இம்முறை தங்களுடைய சொந்த ஊரில் தோற்கடிக்க மும்பை தயாராக உள்ளது. மறுபுறம் மும்பையை முதல் போட்டியிலேயே தோற்கடித்த சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர் தோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

அன்றும் இன்றும் தோனி:

அப்படியே ருதுராஜ் காயத்தை சந்தித்ததால் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக சென்னை வென்றது. இருப்பினும் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல மும்பையை தோற்கடித்து தங்களுடைய வெற்றி நடையை தொடர வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருக்கிறது.

முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008இல் கேப்டனாக இருந்தவர்களில் நடப்பு தொடரிலும் கேப்டனாக இருக்கும் ஒரே வீரராக எம்எஸ் தோனி சாதனை படைத்துள்ளார். அந்தளவுக்கு காலங்களை கடந்த காவியத்தலைவனாக தோனி கேப்டன்ஷிப் பதவியில் அசத்தி வருகிறார் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட தோனி கேப்டன்ஷிப் செய்யும் போட்டிகளில் ரிலாக்ஸாக விளையாட முடியாது என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

- Advertisement -

ரோஹித் பாராட்டு:

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரோஹித் பேசியது பின்வருமாறு. “தோனி நீண்ட காலமாக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஏராளமான போட்டிகளை வென்றுள்ள அவர் நிறைய கோப்பைகளையும் வென்றுள்ளார். எனவே தோனிக்கு எதிராக விளையாடும் போது நீங்கள் ரிலாக்ஸ் செய்ய முடியாது”

இதையும் படிங்க: 4, 4, 4, 4, 4.. 97 ரன்ஸ்.. சதத்தை நழுவ விட்டாலும்.. டெல்லிக்கு 18 வருடத்தில் காணாத தோல்வியை பரிசளித்த பட்லர்

“தோனி தம்மிடம் இருந்து போட்டியையும் வெற்றியும் எளிதில் நழுவிச் செல்ல அனுமதிக்கக் கூடியவர் கிடையாது. அதனால் அவருக்கு எதிராக நீங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் மொத்த போட்டியிலும் கால் விரல்களில் நிற்க வேண்டும். ரிலாக்ஸாக இருக்கக்கூடாது” என்று கூறினார். இந்த நிலையில் தோனிக்கு நிகராக 5 கோப்பைகளை வென்றுள்ள ரோஹித் சர்மா சுமாரான ஃபார்மில் இருப்பதால் விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement