4, 4, 4, 4, 4.. 97 ரன்ஸ்.. சதத்தை நழுவ விட்டாலும்.. டெல்லிக்கு 18 வருடத்தில் காணாத தோல்வியை பரிசளித்த பட்லர்

Jos Buttler
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் 35வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் நேர்த்தியாக விளையாடி 203-8 ரன்கள் அடித்து அசத்தியது.

அந்த அணிக்கு துவக்க வீரர்கள் கருண் நாயர் 31, அபிஷேக் போரேல் 18 ரன்கள் எடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் 28, கேப்டன் 39 ரன்களை எடுத்தார்கள். ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 31, அசுட்டோஸ் சர்மா 37 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல ஃபினிஷிங் கொடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

பட்லர் அசத்தல்:

அடுத்ததாக விளையாடிய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 7 ரன்களில் கருண் நாயரின் அபார எறிதலால் ரன் அவுட்டானார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் அதிரடி காட்டிய தமிழகத்தின் சாய் சுதர்சன் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 36 (21) ரன்னில் குல்தீப் யாதவ் சுழலில் அவுட்டானார்.

இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய பட்லர் அரை சதத்தை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ரூத்தர்போர்ட் விக்கெட்டை எளிதில் விடாமல் பேட்டிங் செய்தார். 3வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி குஜராத்தை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது.

- Advertisement -

டெல்லி தோல்வி:

குறிப்பாக கடந்தப் போட்டியில் டெல்லியை சூப்பர் ஓவரில் வெற்றி பெற வைத்த ஸ்டார்கிற்கு எதிராக 15வது ஓவரில் பட்லர் 5 தொடர்ச்சியான பவுண்டரிகளை பறக்க விட்டார். இறுதியில் ரூதர்போர்ட் 43 (34) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் முகேஷ் குமார் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 3 ரன்னில் நழுவ விட்டு 97* (54) ரன்கள் எடுத்தார்.

ஏனெனில் அடுத்து வந்த ராகுல் திவாட்டியா அவருக்கு வாய்ப்பைக் கொடுக்காமல் 11* (3) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.2 ஓவரில் 204-3 ரன்களை எடுத்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது 5வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் டெல்லியை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியது. அத்துடன் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 200+ ரன்கள் வெற்றிகரமாக குஜராத் சேசிங் செய்து குஜராத் சாதனை படைத்தது.

இதையும் படிங்க: சாய் கிஷோர் என்ன தப்பு செய்ஞ்சாரு.. ஏன் அவரை இப்படி ட்ரீட் பண்றீங்க? – சுப்மன் கில்லை விளாசும் ரசிகர்கள்

மறுபுறம் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 200 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி அணி தோல்வியை சந்தித்தது. இதற்கு முன் 2008 முதல் இப்போடிக்கு முன்பு வரை 13 முறை 200+ ரன்களை கட்டுப்படுத்தி வென்ற டெல்லி முதல் முறையாக இன்று தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement