இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது அஹமதாபாத் நகரில் ஏப்ரல் 19-தேதியான இன்று மதியம் 3.30 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
சாய் கிஷோர் விடயத்தில் சுப்மன் கில் செய்த தவறு :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் அக்சர் பட்டேல் 39 ரன்களையும், அஷுதோஷ் ஷர்மா 37 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக விளையாடிய தமிழக வீரரான சாய் கிஷோர் விடயத்தில் கேப்டன் சுப்மன் கில் நடந்து கொண்டது தவறான விடயம் என ரசிகர்கள் அவரது செயலை கடுமையாக விமர்சித்து சாய் கிஷோருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஏனெனில் இந்த போட்டியின் போது டெல்லி அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோரை அப்போது கொண்டுவரக் கூடாது என்று தாமதம் செய்த சுப்மன் கில் கடைசிவரை சாய் கிஷோரை பந்து வீச விடாமல் போட்டியின் இருபதாவது ஓவரை மட்டுமே வீச வாய்ப்பு கொடுத்தார்.
அப்படி தனக்கு கிடைத்த கடினமான இருபதாவது ஓவரையும் சிறப்பாக வீசிய சாய் கிஷோர் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். கடந்த சில போட்டிகளாகவே மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு 4 ஓவர்களையும் முழுவதுமாக தராமல் விட்டது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : மனைவியுடன் இந்தியாவை விட்டு வெளியேறிய பேட் கம்மின்ஸ்.. 2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகலா? – உண்மை என்ன?
இப்படி போட்டியின் கடைசி ஓவர் வரை வந்து ஒரு ஓவர் மட்டுமே கொடுப்பது மிகப்பெரிய தவறு என்றும் இது போன்ற செயலை சுப்மன் கில் செய்திருக்கக் கூடாது என்றும் ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



