முரட்டுதனமாக அடிக்கும் ராஜஸ்தான் ராஜா. விராட் கோலியின் ஆல்-டைம் ஐபிஎல் சாதனைகள் உடையப்போவது உறுதி

Jos Buttler Vs Virat Kohli IPL
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் தனது அதிரடி சரவெடியாக பேட்டிங்கால் மேலும் அனலை தெறிக்க விட்டு வருகிறார் என்றே கூறலாம். ஏனெனில் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இருந்தே பட்டாசான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இவர் ஒவ்வொரு போட்டியிலும் சொல்லி அடிக்கும் கில்லியாக எதிரணி பவுலர்களை புரட்டி எடுத்து ரன் மழை பொழிந்து வருகிறார். அந்த வகையில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற 34-வது போட்டியில் இவரிடம் சிக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் சிக்கி சின்னாபின்னமானது.

புகப்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய இவர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். டெல்லி பவுலர்களுக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் தன்னை நம்பியிருக்கும் ராஜஸ்தானுக்காக மிரட்டலான பேட்டிங் செய்த அவர் சக தொடக்க வீரர் தேவ்தூத் படிக்கல் உடன் இணைந்து 155 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

- Advertisement -

அசால்ட்டான 3-வது சதம்:
தொடர்ந்து டெல்லிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அவர் 65 பந்துகளில் 9 பவுண்டரி 9 சிக்சர் உட்பட 116 ரன்களை 178.46 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் சதமடித்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே இந்த வருடம் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிராக சதமடித்த அவர் இதையும் சேர்த்து 3-வது சதத்தை விளாசினார். இவருடன் படிக்கல் 54 (35), சஞ்சு சாம்சன் 46* (19) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 222/2 ரன்களை எடுத்த ராஜஸ்தான் இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து 223 என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் 44 (24) போன்ற வீரர்கள் அதிரடியாக ரன்களை எடுத்தாலும் பெரிய ரன்கள் எடுக்க தவறினார்கள். இதனால் 20 ஓவர்களில் முடிந்த அளவுக்கு போராடிய போதிலும் 207/8 ரன்களை மட்டுமே எடுத்த டெல்லி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அதிரடியான வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இது இந்த வருடம் அவர் வாங்கும் 2-வது ஆட்டநாயகன் விருதாகும்.

- Advertisement -

உடையப்போகும் கோலியின் சாதனை:
இவர் இப்படி அதிரடியாக விளையாடுவதை பார்த்தால் கடந்த 2016-ஆம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்து எதிரணிகளை புரட்டி எடுத்த இந்திய நட்சத்திரம் விராட் கோலியை மீண்டும் இந்த வருடம் பார்ப்பதைப் போல் உள்ளது. ஆம் அந்த வருடம் பெங்களூருவின் கேப்டனாக விளையாடிய அவர் ஒவ்வொரு போட்டியிலும் இதேபோல் அதிரடியாக பேட்டிங் செய்து 7 அரை சதங்கள் 4 சதங்கள் உட்பட 973 ரன்களை 81.08 என்ற அபாரமான சராசரியில் 152.03 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசினார்.

அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மென் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற 2 மகத்தான வரலாற்றுச் சாதனைகளை அவர் படைத்தார். கிட்டத்தட்ட 1000 ரன்களை அடித்த காரணத்தால் அவரின் அந்த சாதனையை எவராலும் உடைக்க முடியாது என அனைவரும் நினைத்து வருகின்றனர். ஆனால் இப்போது அவரைப் போலவே பேட்டிங் செய்யும் ஜோஸ் பட்லர் நிச்சயமாக அந்த சாதனையை உடைக்க பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

1. இந்த வருடம் இதுவரை வெறும் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள அவர் 2 அரைசதம் 3 சதங்கள் உட்பட 491* ரன்களை 81.83 என்ற சராசரியில் குவித்து அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். அத்துடன் விராட் கோலிக்கு பின் ஒரு குறிப்பிட்ட சீசனில் 3 சதங்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

2. அதைவிட 2016இல் முதல் 7 போட்டிகளில் விராட் கோலி 433 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் பட்லர் தற்போது அதே முதல் 7 போட்டிகளில் அவரையும் மிஞ்சி 491* ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

3. எனவே இதே போல் விளையாடினால் அடுத்த 7 போட்டிகளில் இன்னும் 483 ரன்களை எடுத்து நிச்சயமாக அவரால் விராட் கோலியின் சாதனையை உடைக்க முடியும் என்று உறுதியாக கூறலாம்.

4. இவை அனைத்துமே அவரின் தற்போதைய பார்மை வைத்துதான் கணக்கீட்டு கூறுகிறேன். ஏனெனில் தனது கடைசி 9 ஐபிஎல் போட்டிகளில் அவர் முறையே 41, 124, 35, 100, 70*, 13, 54, 103, 116 என ரன் மழை பொழிந்து முரட்டுத்தனமான பார்மில் உள்ளார்.

இதையும் படிங்க : ஆல் ஏரியாவிலும் கில்லியாக எதிரணிகளை மிரட்டும் அணி இதுதான் : எல்லாவற்றிலும் முதலிடம், கப் வாங்குமா?

அதிலும் கடந்த 2021க்கு ஏப்ரல் மாதம் வரை ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த அவர் அடுத்த 12 மாதங்களுக்குள் 4 சதங்களை அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Advertisement