அசால்ட்டான சதங்கள், மிரட்டும் பட்லர் ! விராட் கோலி உட்பட யாரும் படைக்காத புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

Jos Buttler 116
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் மிகுந்த விறுவிறுப்புடன் வெற்றிகரமான 4-வது வாரத்தை தொட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. வழக்கம் போல இந்த தொடரிலும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத நிலையில் நிறைய பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்து தங்களது அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து வருகின்றனர். அதேபோல் தரமான பவுலரும் தங்களது திறமையால் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் முன்னோடியாக இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் இந்த வருட ஐபிஎல் தொடரில் விஸ்வரூபம் எடுத்து அசால்டாக சதங்களை அடித்து சாதனைகளை படைத்து வருகிறார்.

Jos Buttler 103

- Advertisement -

அந்த வகையில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற 34-வது லீக் போட்டியில முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு முதல் அதிரடியாக ரன்கள் குவித்த அவர் தேவ்தூத் படிக்கல் உடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றி உறுதி செய்தார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்ட அவர் 19-வது ஓவரை டெல்லி பவுலர்களை புரட்டி எடுத்து 9 பவுண்டரி 9 சிக்ஸர் உட்பட சதமடித்து 116 (65) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரின் அதிரடியால் 20 ஓவர்களில் 222/2 ரன்களை எடுத்த ராஜஸ்தான் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது.

ராஜஸ்தானின் வெற்றிநடை:
அதை தொடர்ந்து 223 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 37 (27), டேவிட் வார்னர் 28 (14), ரிஷப் பண்ட் 44 (24), லலித் யாதவ் 37 (24), ரோவ்மன் போவெல் 36 (15) என முக்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியாக ரன்களை எடுத்த போதிலும் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டானார்கள். அதனால் 20 ஓவர்களில் எவ்வளவு போராடிய போதிலும் 207/8 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி போராடி தோற்றது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

Chahal RR 5 For

அதன் காரணமாக 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு சதமடித்து 116 ரன்கள் விளாசிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:
முன்னதாக மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக சதமடித்த அவர் ராஜஸ்தான் பங்கேற்ற தனது 6-வது போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 2-வது சதமடித்திருந்தார். அதன்பின் நேற்று டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் பங்கேற்ற தனது 7-வது போட்டியில் மீண்டும் சதம் அடித்த அவர் அடுத்தடுத்த 2 போட்டிகளில் சதம் அடித்துள்ளார்.

1. இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சரித்திர சாதனையைத் ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாட்டு வீரரும் இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்ததே கிடையாது. கடந்த 2020இல் இந்திய வீரர் ஷிகர் தவான் தான் முதல் முறையாக இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

2. இத்துடன் இதுவரை வெறும் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள அவர் 35, 100, 70*, 13, 54, 103, 116 என 2 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 491* ரன்களை 81.83 என்ற அபார சராசரி விகிதத்தில் குவித்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கான கௌரவ ஆரஞ்சு தொப்பியையும் தன் வசம் வைத்துள்ளார்.

Jos Buttler Padikkal

3. அதைவிட முதல் 7 போட்டிகளிலேயே 3 சதங்களை அசால்ட்டாக அடித்துள்ள அவர் “ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் 3 சதங்களை அடித்த முதல் வீரர்” என்ற மாபெரும் புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் 4 சதங்கள் அடித்த விராட் கோலி கூட இப்படி முதல் பாகத்தில் அதுவும் முதல் 7 போட்டிகளில் 3 சதங்கள் அடித்ததே கிடையாது.

இதையும் படிங்க : முரட்டுதனமாக அடிக்கும் ராஜஸ்தான் ராஜா. விராட் கோலியின் ஆல்-டைம் ஐபிஎல் சாதனைகள் உடையப்போவது உறுதி

4. இத்துடன் முதல் 7 போட்டிகளில் 491 ரன்கள் அடித்துள்ள அவர் 2016இல் 4 சதங்கள் உட்பட 973 ரன்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த பேட்ஸ்மென் என்ற சாதனை படைத்துள்ள விராட் கோலியின் சாதனையையும் முறியடிக்க பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த வருடம் முதல் 7 போட்டிகளில் விராட் கோலி வெறும் 433 ரன்கள் மட்டுமே எடுக்க பட்லர் அதே 7 போட்டிகளில் 491* ரன்கள் எடுத்து அவரையும் மிஞ்சும் அளவுக்கு விளையாடி வருகிறார்.

Advertisement