தெளிவா இல்லைனா காலி.. அஸ்வின் – நேதன் லயனுக்கு இடையே உள்ள வித்யாசம் பற்றி ரூட் பேட்டி

Joe Root 7
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தங்களுடைய மாயாஜால சுழலால் உலகின் அனைத்து ஜாம்பவான் பேட்ஸ்மேன்களையும் திணறடித்த பெருமைக்குரியவர்கள். அந்த 3 பேருமே தங்களுடைய நாட்டுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களாக சாதனை படைத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ரோல் மாடல்களாக திகழ்கின்றனர்.

அவர்களுக்குப் பின் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் இந்தியாவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் ஆகியோர் மட்டுமே சிறந்த ஸ்பின்னர்களாக வலம் வருகின்றனர். கடந்த 2011இல் ஜோடியான அறிமுகமான இவர்களில் நேதன் லயன் சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மைதானங்களில் அபாரமாக விளையாடி 128 போட்டிகளில் 527* விக்கெட்களை எடுத்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

இருவரிடமும் உள்ள வித்யாசம்:
மறுபுறம் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காத இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே கேரம் பால் உள்ளிட்ட பல்வேறு யுக்திகளை உட்புகுத்தி எதிரணிக்கு சவாலை கொடுத்து வரும் அஸ்வின் 99 போட்டிகளில் 507* விக்கெட்டுகள் எடுத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த 2 மகத்தான ஸ்பின்னர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் பற்றி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பேசியுள்ளார்.

அந்த இருவரையுமே பல தருணங்களில் திறம்பட எதிர்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் குவித்துள்ள அனுபவமிக்க ஜோ ரூட் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் எப்போதும் நீங்கள் முந்தைய பந்தை மீண்டும் எதிர்கொள்ள மாட்டீர்கள் என்ற ஸ்டைலில் பந்து வீசுவார். அவர் அடிக்கடி உங்களை வெள்ளைக்கோட்டின் குறுக்கே இழுத்துச் சென்று உங்களுடைய தலையை ஒரு பக்கமாக வைத்து பேட்டின் இருபுறமும் எட்ஜ் கொடுக்க வைப்பார்”

- Advertisement -

“லயனும் கிட்டத்தட்ட அதே போன்றவர். குறிப்பாக போட்டியின் முதல் பகுதியில் அவர் உங்களுக்கும் உங்களுடைய முழங்காலுக்கும் இடையே பந்து பவுன்ஸாகி பேட்டில் பட்டு லெக் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுக்க வைப்பார். பின்னர் தன்னுடைய வேகத்தை குறைத்து அகலமாக வீசுவார். அவருக்கு காலம் காலமாக மிட்சேல் ஸ்டார்க் பிட்ச்சில் ஓடி பந்து சுழல்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்”

இதையும் படிங்க: டேவான் கான்வேவிற்கு பதிலாக துவக்க வீரராக விளையாடப்போவது யார்? ஆப்ஷனில் 2 பேர் – தோனியின் முடிவு என்ன?

“அதே போல அஸ்வின் நீண்ட காலமாக உங்களை சோர்வடைய செய்வதற்கு பதிலாக உங்களை அவுட் செய்வதற்கான வழியை கண்டறிய சிறிது முயற்சி செய்கிறார். இப்படித் தான் நான் எப்போதும் அவர்களை அணுக முயற்சிக்கிறேன். இவர்களுக்கு எதிராக தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் பொதுவாக இப்படித்தான் சவாலைக் கொடுப்பார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து தரம்சாலாவில் இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement