96 ரன்னுல அதை செய்யலாம்ன்னு பாத்தேன்.. போனா போகுதுன்னு விட்டுட்டேன்.. ஜோ ரூட் பேட்டி

Joe Root 6
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக ராஞ்சியில் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 106*, ஓலி ராபின்சன் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 2, கில் 38, படிடார் 18, ரவீந்திர ஜடேஜா 12, சர்பராஸ் கான் 14, அஸ்வின் 1 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதே போல மறுபுறம் தொடர்ந்து போராடிய ஜெய்ஸ்வாலும் அரை சதமடித்து 73 ரன்கள் குவித்து அவுட்டானார். அதனால் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு துருவ் ஜுரேல் 30*, குல்தீப் யாதவ் 17* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

வேணாம்ன்னு விட்டுட்டேன்:
அதன் காரணமாக ஓரளவு தப்பிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 219/7 ரன்கள் எடுத்து இன்னும் இங்கிலாந்தை விட 134 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 4* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முன்னதாக முதல் மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாட முயற்சித்து விக்கெட்டை பரிசளித்த ஜோ ரூட் இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

ஆனால் இப்போட்டியில் பஸ்பால் அணுகுமுறையை கைவிட்டு தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்தியாவுக்கு எதிராக 10 சதங்கள் முதல் வீரராக உலக சாதனை படைத்து 112/5 என தடுமாறிய போது 122* ரன்கள் குவித்து இங்கிலாந்தை காப்பாற்றி கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் 96 ரன்களில் இருந்த போது ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க நினைத்தும் பிட்ச் சவாலாக இருந்ததால் வேண்டாமென்று விட்டதாக ஜோ ரூட் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “கடந்த சில நாட்கள் எங்களுக்கு நன்றாக அமைந்தது. இப்படி சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடவே நான் விரும்புகிறேன். பிட்ச் தொடர்ந்து மோசமடைவது போல் தெரிகிறது. 96 ரன்களில் இருந்த போது ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை அடிக்கலாம் என்ற எண்ணம் என்னுடைய மனதிற்குள் வந்தது. ஆனால் கடந்த பிட்ச்களை விட ராஞ்சி பிட்ச்சில் பந்து தொடர்ந்து கீழே செல்கிறது. எங்களுடைய அணி வீரர்களுக்காக ரன்கள் அடிக்க விரும்பிய நான் இன்று அதை செய்ததால் மகிழ்ச்சியடைகிறேன்”

இதையும் படிங்க: 219 ரன்ஸ் தானா? கைவிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள்.. போராடிய ஜெய்ஸ்வால்.. இந்தியாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் கவலை

“பென் ஸ்டோக்ஸ்க்கு தொடர்ந்து ஆலோசனை கொடுக்கிறேன். நான் கேப்டனாக இருந்த போதும் அதைத்தான் அவர் செய்தார். எங்களுடைய இரண்டு ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. குறிப்பாக சோயப் பஷீர் பவுலிங்கை இதற்கு முன் பார்க்காவிட்டாலும் இத்தொடரில் அவர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நன்றாக செயல்படுகிறார்” என்று கூறினார்.

Advertisement