219 ரன்ஸ் தானா? கைவிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள்.. போராடிய ஜெய்ஸ்வால்.. இந்தியாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் கவலை

IND vs ENG 4 Day 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ராஞ்சி நகரில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பதால் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய 4வது போட்டியில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் போராடி 353 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த போதிலும் அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 122*, ஓலி ராபின்சன் 58 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

திணறும் இந்தியா:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் நிதானமாக விளையாடி இங்கிலாந்து சவாலை கொடுத்தார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை பெற்ற சுப்மன் கில் 38 ரன்களில் சோயப் பஷீர் சுழலில் சிக்கினார்.

அப்போது வந்த ரஜத் படிடாரை 17 ரன்களில் காலி செய்த சோயப் பசீர் அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜாவையும் 12 ரன்னில் அவுட்டாக்கி அழுத்தத்தை கொடுத்தார். அத்துடன் நிற்காத அவர் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரை சதமடித்து 73 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்ற முயன்ற ஜெய்ஸ்வாலையும் கிளீன் போல்ட்டாக்கி தெறிக்க விட்டார். அதனால் 161/5 என தடுமாறிய இந்திய அணியை காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட சர்பராஸ் கானை 14 ரன்களில் காலி செய்த டாம் ஹார்ட்லி அடுத்ததாக வந்த அஸ்வினையும் 1 ரன்னில் பெவிலியன் அனுப்பினார்.

- Advertisement -

அதன் காரணமாக இந்தியா 200 ரன்கள் தாண்டாது என ரசிகர்கள் கவலையடைந்த போது துருவ் ஜுரேல் அடுத்ததாக வந்த குல்தீப் யாதவுடன் சேர்ந்து நிதானமாக விளையாடினார். அந்த வகையில் விக்கெட்டை எளிதாக விடக்கூடாது என்ற எண்ணத்துடன் விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது நாள் மாலை முழுவதும் நங்கூரமாக செயல்பட்டு 42* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா ஆல் அவுட்டாவதை தடுத்து மானத்தை காப்பாற்றியது.

இதையும் படிங்க: டிராவிட், ஜெய் ஷா பேச்சை கேட்காத ஸ்ரேயாஸ், இஷான்.. பிசிசிஐ தயார் செய்யும் ஆப்பு.. வெளியாக உள்ள அறிவிப்பு

அப்போது நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் முடிவில் 219/7 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவுக்கு களத்தில் ஜுரேல் 30*, குல்தீப் 17* ரன்களுடன் உள்ளனர். ஆனால் கைவசம் 3 விக்கெட்டுகளை மட்டுமே கொண்டுள்ள இந்தியா இன்னும் இங்கிலாந்தை விட 134 ரன்கள் பின்தங்கியுள்ளது. குறிப்பாக ராஞ்சி பிட்ச் 3வது நாளில் போகப்போக பேட்டிங்க்கு சவாலாக மாறும் என்பதால் இன்னும் 134 ரன்கள் அடித்து இந்தியாவை இப்போட்டியில் முன்னிலை பெறுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement