இதுதாங்க உண்மையான நாம பாத்த ஜோ ரூட்.. ஒருவழியா முடிவுக்கு வந்த சொதப்பல் – விவரம் இதோ

Root
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான 33 வயதான ஜோ ரூட் கடந்த 2012-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகி இதுவரை 138 போட்டிகளில் பங்கேற்று 30 சதங்கள் மற்றும் 60 அரைசதங்கள் என 11,493 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை சமகால வீரர்களான விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விட அதிக ரன்களை குவித்து இருக்கும் ஜோ ரூட் தலைசிறந்த வீரராக பார்க்கப்படுகிறார்.

ஆனால் தற்போது இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அவர் சொதப்புலான ஆட்டத்தையே இதுவரை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் மொத்தமாக ஆறு இன்னிங்ஸ்களில் 100 ரன்களை கூட அடிக்காமல் தடுமாறி வந்தார்.

- Advertisement -

இப்படி ஜோ ரூட் தடுமாற்றத்திற்கான காரணம் இங்கிலாந்து அணி கையாண்டு வரும் பாஸ்பால் முறை தான் என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் ஜோ ரூட் இயல்பாகவே பொறுமையாக விளையாடக்கூடியவர். ஆனால் அவர் அதிரடியாக விளையாட நினைத்து ஆட்டமிழந்து வருவதாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் பிப்ரவரி 23-ஆம் தேதியான இன்று ராஞ்சி நகரில் துவங்கி நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் ஜோ ரூட் மட்டும் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்தவகையில் தற்போது 120 பந்துகளை சந்தித்து அரைசதம் கடந்துள்ள ஜோ ரூட் தனது வழக்கமான பாணியில் நிலைத்து நின்று அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விக்கெட் கீப்பர் பென் போக்ஸ்சுடன் ஜோடி சேர்ந்து அவர் அமைத்துள்ள பாட்னர்ஷிப் 70 ரன்களை கடந்து தற்போது படிப்படியாக அவர்களை சரிவில் இருந்து மீட்டெடுத்து வருகிறது.

இதையும் படிங்க : இனிமேலும் சேப்பாக்கம் சிஎஸ்கே கோட்டை கிடையாது.. ஆர்சிபி’க்கு வாய்ப்பிருக்கு.. தமிழக வீரர் அதிரடி கருத்து

பொதுவாகவே நிதானமாக ரன் குவிக்கும் ஜோ ரூட் இந்த போட்டியில் ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் தனது இயல்பான பாதைக்கு திரும்பி விளையாடியதாலே தற்போது அரைசதம் கடந்து பார்முக்கு திரும்பி உள்ளார் என்று பலரும் அவரது இந்த இன்னிங்ஸ் குறித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement