இனிமேலும் சேப்பாக்கம் சிஎஸ்கே கோட்டை கிடையாது.. ஆர்சிபி’க்கு வாய்ப்பிருக்கு.. தமிழக வீரர் அதிரடி கருத்து

CSK vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி சென்னையில் துவங்கும் ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கடந்த வருடம் 41 வயதிலும் அபாரமாக கேப்டன்ஷிப் செய்த தோனி தலைமையில் சிறப்பாக விளையாடிய சென்னை ஐந்தாவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. அந்த வரிசையில் இம்முறை மீண்டும் தோனி தலைமையில் விளையாடும் சென்னை எதிரணிகளை தோற்கடித்து 6வது கோப்பையை முத்தமிட்டு சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

கோட்டை இல்ல:
அதற்கு தகுந்தார் போல் இம்முறை தங்களுடைய முதல் போட்டியில் பெங்களூருவை அதுவும் தங்களுடைய கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே எதிர்கொள்கிறது. வரலாற்றில் இதற்கு முன் பெங்களூருவை சந்தித்த 30 போட்டிகளில் 20 வெற்றிகளை பதிவு செய்துள்ள சென்னை இம்முறையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் தமிழக ரசிகர்களின் ஆதரவுடன் காலமாக காலமாக சென்னை அதிக வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே தங்களின் கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் இம்முறையும் பெங்களூருவை தோற்கடித்து சிஎஸ்கே தங்களுடைய 6வது கோப்பையை வெல்லும் பயணத்தை வெற்றிகரமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் சேப்பாக்கம் மைதானம் இனிமேலும் சிஎஸ்கே அணியின் கோட்டை அல்ல என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் அபிநவ் முகுந்த் கூறியுள்ளார். அதற்கான காரணத்தைப் பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் கூறியது பின்வருமாறு. “சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி மோதும் போட்டிகள் கடந்த பல வருடங்களாக பெரிதாக இருந்து வருகிறது. சேப்பாக்கத்தில் ஆர்சிபி அணி நிறைய முறை வெற்றியை நெருங்கியும் எல்லையை கடக்காமல் கோட்டை விட்டது”

இதையும் படிங்க: பாசத்தில் சர்பராஸ் கானை மிஞ்சிய ஆகாஷ் தீப்.. அம்மாவுக்கு கொடுத்த அற்புதமான மரியாதை.. இதை கவனிச்சிங்களா

“அதில் ஓரிரு தருணங்கள் ரசிகர்களின் இதயத்தில் இப்போதும் உள்ளது. தற்போது சேப்பாக்கத்தில் உள்ள பிட்ச் மாறிவிட்டது என்பது ஆர்சிபி அணிக்கு நல்ல செய்தியாகும். எனவே இனிமேலும் அது சிஎஸ்கே அணியின் கோட்டை அல்ல. ஏனெனில் கடந்த வருடம் கோப்பையை வென்றாலும் சேப்பாக்கத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப்புக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சுழல் பந்து வீச்சுக்கு உகந்த சூழ்நிலை மற்றும் அவர்களிடம் இருக்கும் ஸ்பின்னர்களை பார்க்கும் போது சிஎஸ்கே பேப்பரில் வலுவான அணியாகவே இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement