பாசத்தில் சர்பராஸ் கானை மிஞ்சிய ஆகாஷ் தீப்.. அம்மாவுக்கு கொடுத்த அற்புதமான மரியாதை.. இதை கவனிச்சிங்களா

Akash Deep
- Advertisement -

ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக இளம் வீரர் ஆகாஷ் தீப் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் பீகார் அணிக்காக 30 போட்டிகளில் 103 விக்கெட்டுகளை 23.58 என்ற சராசரியில் எடுத்து அட்டகாசமாக செயல்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அம்மாவுக்கு மரியாதை:
அந்த வகையில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 3 பயிற்சி போட்டிகளில் 12 விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதன் காரணமாக இந்த போட்டியில் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 313வது வீரராக அறிமுகமான அவருக்கு ஜாம்பவான் ராகுல் டிராவிட் அறிமுகத் தொப்பியை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் அவரை கட்டியணைத்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அருகில் இருந்த தன்னுடைய குடும்பத்தினரை நோக்கிச் சென்ற ஆகாஷ் தீப் நேரடியாக தனது அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

குறிப்பாக இதே தொடரில் அறிமுகமான ரஜத் படிடார், சர்பராஸ் கான் கூட தங்களுடைய அறிமுகப் போட்டியில் இப்படி பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவில்லை. அந்த வகையில் தன்னுடைய அம்மாவுக்கு வேற லெவல் மரியாதை கொடுத்த ஆகாஷ் தீப் சிறப்பாக பந்து வீசி ஆரம்பத்திலேயே ஜாக் கிராவ்லியை கிளீன் போல்ட்டாக்கினார். இருப்பினும் வெள்ளைக் கோட்டுக்கு வெளியே காலை வைத்து வீசியதால் அதை நடுவர் நோபால் என்று அறிவித்தார்.

இதையும் படிங்க: புது பையனே நல்லா போடுறான்.. உனக்கென்ன? முகமது சிராஜ் மீது அதிருப்தி அடைந்த ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

அதனால் ஏமாற்றத்தை சந்தித்த அவர் மனம் தளராமல் அதற்கடுத்த சில ஓவர்களில் பென் டக்கெட், ஓலி போப் ஆகியோரை அவுட்டாக்கி ஜாக் கிராவ்லியையும் க்ளீன் போல்ட்டாக்கினார். அந்த வகையில் பும்ரா இல்லாத குறையை தீர்க்கும் அளவுக்கு முதல் நாள் உணவு இடைவெளிக்குள் மூன்று விக்கெட்டுகளை எடுத்த அவர் இப்போட்டியில் இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை பெற்றுக் கொடுத்து தன்னுடைய தேர்வை நிரூபிக்கும் வகையில் பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement