டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக ரிக்கி பாண்டிங் மாபெரும் சாதனையை சமன் செய்த – ஜோ ரூட் (விவரம் இதோ)

Ponting-and-Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

அப்படி பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்து அணியானது முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 11.5 ஓவர்களில் 55 ரன்கள் சேர்த்திருந்த வேளையில் முதல் விக்கெட்டை இழந்தது. அதற்கடுத்து 58 மற்றும் 60 ரன்களில் இருந்தபோது இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டை இழந்து 60 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பாக ரன்களை சேர்ந்தது. இருப்பினும் அணியின் எண்ணிக்கை 121-ஆக இருந்தபோது பேர்ஸ்டோ 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து ஐந்தாவது விக்கெட்டாக அணியின் எண்ணிக்கை 125-ஆக இருந்தபோது 29 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் 60 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 29 ரன்களை குவித்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங்கின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் : இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாண்டிங் 2555 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.

இதையும் படிங்க : 2535 ரன்ஸ்.. சச்சினின் வரலாற்று சாதனையை 33 வயதிலேயே உடைத்த ரூட்.. இந்திய ரசிகர்கள் கவலை

இந்நிலையில் இந்த போட்டியில் ஜோ ரூட் அடித்த 29 ரன்கள் மூலம் அவரும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2555 ரன்கள் குவித்து ரிக்கி பாண்டிங்கின் இந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement