2535 ரன்ஸ்.. சச்சினின் வரலாற்று சாதனையை 33 வயதிலேயே உடைத்த ரூட்.. இந்திய ரசிகர்கள் கவலை

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜாக் கிராவ்லி 20, பென் டுக்கெட் 35 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார்கள்.

அந்த நிலைமையில் வந்த ஓலி கோப்பை 1 ரன்னில் ரவீந்திர ஜடேஜா காலி செய்ததால் 60/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜானி பேர்ஸ்டோவை 37 ரன்களில் அக்சர் படேல் அவுட்டாக்கிய நிலையில் மறுபுறம் சவாலை கொடுத்த ஜோ ரூட்டை 29 ரன்களில் ரவீந்திர ஜடேஜா திருப்பினார்.

- Advertisement -

உடைந்த சச்சின் சாதனை:
அதனால் 5 விக்கெட்களை இழந்து அதிரடியாக விளையாட முடியாமல் இங்கிலாந்து தடுமாறி வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் தம்மால் முடிந்தளவுக்கு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்த 29 ரன்களையும் சேர்த்து இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய மொத்த கேரியரில் இதுவரை 2536 ரன்களை குவித்துள்ளார்.

இதன் வாயிலாக வரலாற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 2535 ரன்கள் ஆல் டைம் சாதனையை உடைத்துள்ள ஜோ ரூட் புதிய சரித்திரம் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜோ ரூட் : 2536
2. சச்சின் டெண்டுல்கர் : 2535
3. சுனில் கவாஸ்கர் : 2483
4. அலெஸ்டர் குக் : 2431
5. விராட் கோலி : 1991

- Advertisement -

இத்தனைக்கும் வெறும் 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 136 போட்டிகளில் 11437 ரன்களை 50.38 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார். தற்போதைய நிலைமையில் இன்னும் குறைந்தது 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் இதே வேகத்தில் விளையாடினால் கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையையும் உடைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் இப்படி ஒரு தொடரில் நான் விளையாடுவது இதுவே முதல்முறை – ரோஹித் சர்மா ஓபன்டாக்

ஏனெனில் 15921 ரன்களை குவித்து சச்சின் படைத்துள்ள அந்த சாதனையை அடுத்த 4 வருடத்தில் தலா 1000 – 1200 ரன்கள் அடித்தாலே ஜோ ரூட் எளிதாக உடைத்து விடலாம். பொதுவாக சாதனைகள் என்றால் உடைக்கப்படுவதற்காக படைக்கப்படுகிறது என்று வல்லுநர்கள் சொல்வார்கள். அந்த வகையில் சச்சினின் சாதனையை ஒரு இந்தியர் அல்லாத ஜோ ரூட் போன்ற வெளிநாட்டு வீரர் உடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு கவலையை கொடுப்பதாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement