54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் இப்படி ஒரு தொடரில் நான் விளையாடுவது இதுவே முதல்முறை – ரோஹித் சர்மா ஓபன்டாக்

Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஜனவரி 25-ஆம் தேதியான இன்று ஹைதராபாத் நகரில் துவங்கியது.

இந்த போட்டியின் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு விடைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்தோம். ஏனெனில் மைதானம் வறண்டு காணப்படுவதால் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் நாங்கள் முதலில் பந்து வீசுவது குறித்து தயங்கவில்லை.

ஏனெனில் பேட்டிங்காக இருந்தாலும் சரி, பவுலிங்காக இருந்தாலும் சரி எங்களது திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த தொடர் எங்களுக்கு மிகச் சிறப்பான ஒரு தொடராக இருக்கும். அதேபோன்று இது போன்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுவது இதுவே எனக்கு முதல் முறை.

- Advertisement -

அதனால் சக வீரர்களுடன் சேர்ந்து நானும் இந்த தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். நாங்கள் இந்திய மண்ணில் இது போன்ற ஆடுகளங்களில் ஏற்கனவே நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளோம் என்பதனால் நிச்சயம் எங்களுக்கு அந்த அனுபவம் இந்த போட்டியில் உதவும்.

இதையும் படிங்க : 48 பால்.. 17 ரன்.. 4 விக்கெட்.. அவரு பயந்த மாதிரியே நடந்திடுச்சி – தெறிக்கவிட்ட தமிழக வீரர் அஷ்வின்

இந்த போட்டியில் எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுவோம் என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி தற்போது உணவு இடைவேளையை கடந்து 4 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை கடந்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement